`இதனுள் கொஞ்சம் பணம் இருக்கிறது'- உணவு வழங்கிய இஸ்லாமியர்களால் நெகிழ்ந்த நோயாளிகள்

பணம் கொடுக்கப்பட்ட கவர்
பணம் கொடுக்கப்பட்ட கவர்

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று வந்து சேர்ந்த உணவுப் பொட்டலம், அர்த்தமுள்ள ரமலான் வாழ்த்தாகவும் வந்து சேர்ந்தது நெகிழ்வை ஏற்படுத்தியுள்ளது.

கேரளத் தலைநகர் திருவனந்தபுரத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளது. இங்கு ஏராளமான நோயாளிகள் உள்நோயாளிகளாகத் தங்கி சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். இவர்களுக்கும், இவர்களை உடன் இருந்து தங்கி கவனித்துக் கொள்வோருக்கும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் ‘பொதி சோறு வழங்குதல்’ என்னும் திட்டம் நடைமுறையில் உள்ளது. அதாவது தினமும் மதியம் இவர்களுக்கு நல்ல தரமான உணவை வழங்குவதுதான் திட்டம்.

இதற்காக நல்ல உள்ளங்கள் பணமாகவோ, அல்லது உணவுப் பொட்டலங்களாகவோ டி.ஒய்.எப்.ஐ அமைப்பின் தன்னார்வலர்களிடம் கொடுக்கின்றனர். இன்று மதியம் ஒரு குடும்பத்தின் சார்பில் உணவுப் பொட்டலம் வழங்கப்பட்டது. அதில் அவர்களது பெயர் விவரங்கள் இல்லை. அந்த உணவுப் பொட்டலத்தின் கூடவே ஒரு கவரும் இருந்தது. அந்த கவரில் சிறிய அளவில் தொகையும் இருந்தது. உணவும் கொடுத்து தொகையும் கொடுத்திருப்பதன் கவரின் அடிக்குறிப்பில், “இதனுள் கொஞ்சம் பணம் இருக்கிறது. அந்த பணத்தை மாலையில் தேநீர் குடிக்க பயன்படுத்தவும். ஈத் பெருநாள் வாழ்த்துகள்” எனவும் மலையாளத்தில் எழுதியிருந்தது. இந்த நல்ல மனம் வாழ்க என மலையாளிகள் இதைக் கொண்டாடி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in