‘மென்பொறியாளர்கள் அழைக்க வேண்டாம்’ - ‘மேட்ரிமோனியல்’ விளம்பரமும் வைரலான வலைப்பதிவுகளும்!


‘மென்பொறியாளர்கள் அழைக்க வேண்டாம்’ -  ‘மேட்ரிமோனியல்’ விளம்பரமும் வைரலான வலைப்பதிவுகளும்!

சமீபத்தில் வெளியான மணமகன் தேவை விளம்பரம் ஒன்றில் மென்பொறியாளர்கள் (சாஃப்ட்வேர் இன்ஜினியர்கள்) அழைக்க வேண்டாம் என்று நிபந்தனை விதிக்கப்பட்டிருப்பது நெட்டிசன்களிடையே சிரிப்பலையை ஏற்படுத்தியிருக்கிறது.

மணமகன் அல்லது மணமகள் தேவை எனும் பெயரில் வெளியாகும் சில விளம்பரங்கள் வைரலாவது உண்டு. வித்தியாசமான, விநோதமான நிபந்தனைகள் முன்வைக்கப்படுவதுதான் இதுபோன்ற விளம்பரங்கள் வைரலாவதற்கு முக்கியக் காரணம்.

அந்த வகையில் சமீர் அரோரா எனும் தொழிலதிபர், நாளிதழ் ஒன்றில் வெளியான மணமகன் தேவை விளம்பரம் ஒன்றை ட்விட்டரில் பகிர்ந்துகொண்டார்.

அதில், ‘நல்ல நிறமும் அழகும் கொண்ட, பணக்கார வணிகப் பின்னணி கொண்ட 24 வயது பெண்ணுக்கு மணமகன் தேவை’ எனத் தொடங்கும் அந்த விளம்பரத்தில், மணமகன் அதே சாதியைச் சேர்ந்த ஐஏஎஸ் அல்லது ஐபிஎஸ் அதிகாரியாக அல்லது முதுநிலை மருத்துவம் படித்த மருத்துவராக அல்லது தொழிலதிபராக இருக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.

அழைக்க வேண்டாம்’ என்று ஒரு நிபந்தனையும் அதில் விடுக்கப்பட்டிருக்கிறது.

இதைப் பகிர்ந்துகொண்ட சமீர் அரோரா, ‘ஐடி துறையின் எதிர்காலம் சிலாக்கியமாக இல்லை போலும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு நெட்டிசன்கள் பலர் பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்துவருகின்றனர். ஒருவர், ‘இந்த விளம்பரத்தைப் பார்க்கும்போது, ஒட்டுமொத்த தேசத்தின் எதிர்காலமே சிலாக்கியமாக இருப்பதாகத் தெரியவில்லை’ என்று கூறியிருக்கிறார். இன்னொருவர், ‘கவலைப்படாதீர்கள். மென்பொறியாளர்கள் நாளிதழ் விளம்பரத்தை நம்பி இருப்பவர்கள் அல்ல, அவர்கள் தங்கள் சொந்த பாணியில் தேடிக்கொள்வார்கள்’ என்று நகைச்சுவையுடன் தெரிவித்திருக்கிறார்.

சில மென்பொறியாளர்கள் சென்டிமென்ட் ரீதியில் பதிவிட்டிருக்கிறார்கள். ‘ஐடி இல்லாமல் எதிர்காலம் இல்லை’ என்று ஒருவர் சற்றே ஆதங்கத்துடன் எழுதியிருக்கிறார். இன்னொருவரோ, ‘இந்தப் பேரழிவிலிருந்து தப்பிவிட்டதாக மென்பொறியாளர்கள் மார்க் செய்திருக்கிறார்கள் (குறிப்பிட்டிருக்கிறார்கள்)’ என படு கிண்டலாகப் பதிவிட்டிருக்கிறார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in