குட்நியூஸ்...ஜேஇஇ தேர்வுக்கு விண்ணப்பிக்க டிச.4-ம் தேதி வரை அவகாசம்!

தேசிய தேர்வு முகமை தேர்வு
தேசிய தேர்வு முகமை தேர்வு
Updated on
1 min read

மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான என்ஐடி, ஐஐடி, ஐஐஐடி ஆகியவற்றில் சேர நடத்தப்படும் ஜேஇஇ முதன்மைத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டித்து தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான என்ஐடி, ஐஐடி, ஐஐஐடி ஆகியவற்றில் வழங்கப்படும் படிப்புகளில் சேர ஜேஇஇ எனப்படும் கூட்டு நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வு இரண்டுக் கட்டங்களாக, ஜேஇஇ மெயின் (முதல்நிலை), அட்வான்ஸ்டு (முதன்மைத் தேர்வு) என்று பிரித்து நடத்தப்படுகிறது. ஆண்டுதோறும் இந்தத் தேர்வு நடத்தப்படும் நிலையில், நுழைவுத் தேர்வு தொடர்பான அறிவிப்பை தேசியத் தேர்வுகள் முகமை வெளியிட்டது.

தேர்வு
தேர்வு

இந்த நிலையில் 2024-ம் ஆண்டுக்கான ஜேஇஇ முதன்மைத் தேர்வுக்கு நவ.2-ம் தேதி முதல் விண்ணப்பப் பதிவு தொடங்கியது. மாணவர்கள் விண்ணப்பிக்க நவ.30-ம் தேதி கடைசி என்று தேசியத் தேர்வுகள் முகமை தெரிவித்த நிலையில், கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி மாணவர்கள் டிச.4-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in