வலி மற்றும் புறக்கணிப்பிலிருந்து பிறக்கும் சொல் - ‘நகரோடி’

வலி மற்றும் புறக்கணிப்பிலிருந்து பிறக்கும் சொல்!

புறக்கணிப்பிலிருந்தும் ஒடுக்குதலிலிருந்தும் வெளிவர ஓர் ஆயுதமாகவே, கருப்பினச் சகோதரர்கள் ‘சொல்லிசை’ எனும் இசை வடிவத்தைக் கண்டடைந்தார்கள். அதை அசலான தன்மையுடன் தமிழ்நாட்டில், மொழி, இன, வரலாறு மற்றும் அரசியலைப் பாட வெற்றிகரமாகப் பயன்படுத்திய கலைஞர்கள் பலர். அவர்களில் ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதியும் ‘தமிழ் ஆப்தன்’ என்கிற தினேஷும் முக்கியமானவர்கள் என்றால், தற்போது ‘தெருக்குரல்’ அறிவு.

மாநகரத்து மண்ணின் ஆதிக்குடிகளை நகரத்திலிருந்து பிடுங்கியெடுத்து புறநகரில் வீசும் பெரும் நில, இடப் பிடுங்கலுக்கு எதிராகத் தொடர்ந்து தனது சொல்லிசையைப் பயன்படுத்தி வருகிறார். தற்போது வசந்தபாலன் இயக்கியிருக்கும் ‘ஜெயில்’ படத்தின் பரப்புரைப் பாடலாக, ’நகரோடி’ என்கிற பாடலை எழுதியிருக்கிறார்.

ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவாகியிருக்கும் இந்தப் பாடலில் இடம்பெற்றுள்ள ‘நகரோடி’ என்ற சொல், வலி மற்றும் புறக்கணிப்பிலிருந்து பிறந்திருக்கும் ஒன்றாகவே இருக்கிறது. ‘இறைவி’ என்பதைப்போல முற்றிலும் புதிய சொல்லாக்கம் இது.

தமிழ் எக்காலத்திலும் செழுமையான மொழி என்பது மட்டுமல்ல; சொற்களின் வற்றாத ஊற்றும்தான். ‘நகரோடி’ பாடலின் வரிகளை அறிந்துகொள்ள உங்களைப்போல் நானும் ஆவலாக இருக்கிறேன்.

-ஆர்.சி.ஜெயந்தன்

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in