இணைய உலகம் ‘லேட்டஸ்ட் பீஸ்’ அண்ணாமலை!

இணைய உலகம்

‘லேட்டஸ்ட் பீஸ்’ அண்ணாமலை!
அண்ணாமலை

சமீபமாக நெட்டிசன்களிடம் சிக்கியிருப்பது பாஜக தலைவர் அண்ணாமலை. பாஜகவில் இதற்கு முன்பிருந்த தமிழிசை, எச்.ராஜா போலவே இவரும் எதையாவது பேசி சர்ச்சையில் சிக்கிக்கொள்கிறார். அப்படித்தான் தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ஜிஎஸ்டி கூட்டத்தில் கலந்துகொள்ளாததற்கு, அவர் கூறிய காரணத்தை மேலோட்டமாகப் புரிந்துகொண்டு, முதல்வருக்குக் கடிதம் எழுதியதன் மூலம் வலைபாய்பவர்களின் வலையில் சிக்கியுள்ளார் அண்ணாமலை. திமுக அனைத்து விவகாரங்களிலும் சிக்ஸர் அடிக்கிறது. ஆனால், தமிழக பாஜக எல்லா விவகாரங்களிலும் பல்பு வாங்கிக் கொண்டே இருக்கிறது. தமிழக பாஜக தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் அனைவருமே, அரைகுறையாக விஷயங்களை அணுகுபவர்களாக இருக்கிறார்கள். பாஜக, தமிழகத்தில் உண்மையிலேயே ஆட்சியைப் பிடிக்கத்தான் கட்சி நடத்துகிறதா இல்லை டைம்பாஸ் செய்கிறதா என்று தெரியவில்லை!

மேலும் வாசிக்க விருப்பமா?

இந்த கட்டுரை தங்களுக்குப் பிடித்திருப்பதில் மகிழ்ச்சி. மேற்கொண்டு வாசிக்க சந்தாதாரர் ஆகுங்கள்.

Already have an account? Sign In

Related Stories

No stories found.