ஷூவிற்குள் மறைந்திருந்த நாகப்பாம்பு: ஐஎஃப்எஸ் அதிகாரி பகிர்ந்த அதிர்ச்சி வீடியோ!

ஷூவிற்குள் மறைந்திருந்த நாகப்பாம்பு: ஐஎஃப்எஸ் அதிகாரி பகிர்ந்த அதிர்ச்சி வீடியோ!

அடுக்கிவைக்கப்பட்டிருந்த ஷூவிற்குள் மறைந்திருந்த நாகப்பாம்பினை பாதுகாப்பாக வெளியே கொண்டுவரும் வீடியோவை பகிர்ந்த இந்திய வனப்பணிகள் அதிகாரியான சுசாந்தா நந்தா, ‘மழைக்காலங்களில் கவனம் தேவை’ என எச்சரித்துள்ளார்.

ஒடிசாவை சேர்ந்த ஐஎஃப்எஸ் அதிகாரி சுசாந்தா நந்தா, காலணிக்குள் நாகப்பாம்பு மறைந்திருக்கும் வீடியோவைப் பகிர்ந்துகொண்டு, "மழைக்காலங்களில் எதிர்பாராத இடங்களில் அவற்றைக் காண்பீர்கள். கவனமாக இருங்கள். பயிற்சி பெற்ற பணியாளர்களின் உதவியைப் பெறுங்கள்" என்று ட்வீட் செய்துள்ளார்.

அவர் பகிர்ந்துள்ள அந்த வீடியோவில், ஷூவில் தட்டும்போது நாகப்பாம்பு ஒன்று திடீரென வெளிப்படுகிறது. பாம்புகளை கையாளுவதில் பயிற்சி பெற்ற ஒரு அதிகாரி லாவகமாக அந்த பாம்பினை வெளியே கொண்டுவருகிறார். பார்ப்பதற்கே திகிலூட்டும் வகையில் இந்த காணொலி உள்ளது. எப்போதும் காலணிகளை அணிவதற்கு முன்பு நன்றாக பரிசோதித்து அதன்பின்னரே பயன்படுத்த வேண்டும் என்று அந்த அதிகாரி மக்களுக்கு அறிவுறுத்தினார். ஐஎஃப்எஸ் அதிகாரி பகிர்ந்து கொண்ட இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in