மைதானத்திலேயே காதலைச் சொன்ன ஹாங்காங் வீரர்: இந்திய ஆட்டத்தில் நடந்த சுவாரஸ்யம்!

மைதானத்திலேயே காதலைச் சொன்ன ஹாங்காங் வீரர்: இந்திய ஆட்டத்தில் நடந்த சுவாரஸ்யம்!

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த இந்தியாவுக்கு எதிரான போட்டியின்போது, ஹாங்காங் வீரர் கிஞ்சித் ஷா மைதானத்திலேயே தனது காதலியிடம் காதலை வெளிப்படுத்தி ஆச்சர்யமளித்தார். இந்த வீடியோ இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.

ஹாங்காங் பேட்ஸ்மேன் கிஞ்சித் ஷா, இந்தியாவுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தை தனது வாழ்வின் மறக்க முடியாத தருணமாக மாற்றியுள்ளார். நேற்றைய ஆட்டம் முடிந்தவுடன் மைதானத்தின் போர்ட்டிகோவில் நின்றுகொண்டிருந்த காதலிக்கு முன்பு கிஞ்சித் ஷா புத்துணர்ச்சியுடன் சென்று நின்றார். யாரும் எதிர்பார்க்காத விதமாக திடீரென கிஞ்சித் ஷா முழங்காலிட்டு மோதிரத்தை தனது காதலியிடம் வழங்கி காதலை வெளிப்படுத்தினார். கிஞ்சித் ஷாவின் செயலால் ஆச்சர்யமடைந்த அவரின் காதலி பேருவகையுடன் காதலை ஏற்றுக்கொள்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

இதனைக் கண்ட ரசிகர்களும், அவரது அணியினரும் கிஞ்சித் ஷாவை உற்சாகப்படுத்துவதையும் வீடியோவில் காண முடிந்தது. 26 வயதான கிஞ்சித் ஷா நேற்றைய இந்தியாவுக்கு எதிரான போட்டியில் 4-வது பேட்ஸ்மேனாக களமிறங்கி 28 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தார். அவர் இரண்டு பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் விளாசி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் எதிர்பாராத விதமாக 18வது ஓவரில் புவனேஷ்வர் குமார் வீசிய பந்தில் ஆட்டமிழந்தார்.

மிடில்-ஆர்டர் பேட்ஸ்மேனான கிஞ்சித் ஷா இதுவரை 43 டி20 போட்டிகளில் விளையாடி 20.42 சராசரியுடன் 633 ரன்கள் எடுத்துள்ளார். 2019ல் அயர்லாந்துக்கு எதிராக அடித்த 79 ரன்கள் இவரின் அதிகபட்ச ஸ்கோராகும். அவர் டி20 போட்டிகளில் இதுவரை 11 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.

2022 ஆசியக் கோப்பை தொடரில் நேற்று தனது தொடக்க ஆட்டத்தில் இந்தியாவுடன் மோதிய ஹாங்காங் அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. ஹாங்காங் அணி தோல்வியை தழுவினாலும், அந்த அணியின் வீரர் கிஞ்சித் ஷா நேற்று தனது காதலை சிறப்பாக வெளிப்படுத்தி வெற்றி பெற்றுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in