ஆம் ஆத்மி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ட்வீட்-களை நீக்க உத்தரவிட்ட தேர்தல் ஆணையம்; முழுக்க உடன்பட மறுக்கும் எக்ஸ் தளம்

இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார்
இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார்

குறிப்பிட்ட கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட பதிவுகளை எக்ஸ் தளத்தில்(ட்விட்டர்) இருந்து நீக்குமாறும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதற்கு எக்ஸ் தளம் பகுதியளவு மட்டுமே உடன்பட்டுள்ளது.

பிரபல சமூக வலைத்தளமான எக்ஸ் தளம், மக்களவை தேர்தல் நெருக்கத்தில் மற்றுமொரு முறை இந்தியாவில் சர்ச்சைக்கு ஆளாகி உள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகளின் அடிப்படையில் குறிப்பிட்ட பதிவுகளை எக்ஸ் தளத்தில் இருந்து நீக்குமாறு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டதற்கு, பகுதியளவு மட்டுமே எக்ஸ் தளம் உடன்பட்டுள்ளது. மேலும் கருத்து சுதந்திரத்துக்கு எதிரான நடவடிக்கை எனவும் எக்ஸ் தளம் அவற்றை விமர்சித்துள்ளது.

இந்திய தேர்தல் ஆணையம்
இந்திய தேர்தல் ஆணையம்

தேர்தல் நடத்தை விதிகளை மீறியதற்காக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளின் அதிகாரபூர்வ பதிவுகள், ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் பீகார் துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி ஆகிய அரசியல் தலைவர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட பதிவுகளை நீக்குமாறு எக்ஸ் தளத்துக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இது தொடர்பான தகவலை எக்ஸ் தளம் இன்று பகிரங்கப்படுத்தி உள்ளது.

’ஏப்ரல் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு இருந்தன. முந்தைய உத்தரவுகள் தொடர்பாக ஏப்ரல் 10 அன்று தேர்தல் ஆணையம் ’ஃபாலோ அப்’ மின்னஞ்சல் ஒன்றையும் அனுப்பி இருந்தது. எக்ஸ் தளத்தில் இடம்பெற்றுள்ள குறிப்பிட்ட பதிவுகளை நீக்கத் தவறினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் எச்சரிந்து இருந்தது’ என எக்ஸ் தளம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது நடவடிக்கைகளுடன் தொடர்பில்லாத அல்லது சரிபார்க்கப்படாத குற்றச்சாட்டுகள், திரிக்கப்பட்ட உண்மைகள் என கட்சிகளின் தலைவர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளின் தனிப்பட்ட வாழ்க்கையின் எந்த அம்சத்தை அடிப்படையாகக் கொண்டும் விமர்சிக்கும் போக்கு என்பது மாதிரி நடத்தை விதிகளை மீறுவதாக தேர்தல் குழு கண்டறிந்துள்ளது.

ட்விட்டர் / எக்ஸ் தளம்
ட்விட்டர் / எக்ஸ் தளம்

தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்கு ஆட்படும் வகையில் அந்த பதிவுகளை எக்ஸ் தளம் நிரந்தரமாக நீக்கியிருக்க வேண்டும். ஆனால் கருத்து சுதந்திரத்துக்கு முக்கியத்துவம் தரும் தங்கள் நிர்வாகத்தின் கொள்கைப்படி அந்த பதிவுகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருப்பதாக எக்ஸ் தளம் அறிவித்துள்ளது.

"ஆணையத்தின் ஆணைகளுக்கு இணங்க, நாங்கள் இந்த இடுகைகளை தேர்தல் காலத்தின் எஞ்சிய காலத்திற்கு நிறுத்தி வைத்துள்ளோம். இருப்பினும், இந்த நடவடிக்கைகளுடன் நாங்கள் உடன்படவில்லை. மேலும் கருத்து சுதந்திரம் என்பதை இந்த பதிவுகளில் பொதுவான அரசியல் உரையாடல் வரை நீட்டிக்கப்பட வேண்டும் என்றே விரும்புகிறோம்" எனவும் எக்ஸ் தளம் விளக்கம் அளித்துள்ளது. ”எங்கள் நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட பயனர்களுக்கு அதுகுறித்து நாங்கள் அறிவித்துள்ளோம். வெளிப்படைத் தன்மையின் நலன் கருதி, எங்களது நடவடிக்கைகள் குறித்து இங்கே வெளியிடுகிறோம்” என்றும் எக்ஸ் தளம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் எக்ஸ் தளத்துக்கும் - மத்திய அரசுக்கும் இடையிலான உரசல்கள் இதற்கு முன்பும் ஏராளமாக எழுந்துள்ளன. எக்ஸ் தளம் ட்விட்டராக செயல்பட்ட காலத்திலேயே எழுந்த சர்ச்சை காரணமாக, இந்தியாவிலிருந்து ட்விட்டருக்கு போட்டியாக பிரத்யேக போட்டித் தளம் ஒன்று உருவாக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

இந்த 5 தொகுதிகளில் வெற்றி இழுபறி!

தமிழ்நாட்டின் மிகப்பெரிய சந்தைக்கு 2 நாட்கள் விடுமுறை... தேர்தலை முன்னிட்டு அறிவிப்பு!

புதுச்சேரியில் இன்று முதல் 144 தடை உத்தரவு... தேர்தல் ஆணையம் அதிரடி!

தாயைப் பிரிந்த ஏக்கம்... 25 நாட்களாக தவித்த குட்டியானை உயிரை இழந்தது!

நேரிலும், செல்போனிலும் வாலிபர் காதல் டார்ச்சர்.... மனமுடைந்த பள்ளி மாணவி தற்கொலை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in