நீச்சல் தெரியாது போடா: வானதியின் கிண்டல் பதிவு!

நீச்சல் தெரியாது போடா:  வானதியின் கிண்டல் பதிவு!

சென்னை உட்பட பல மாவட்டங்களிலும் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. பெருமழை காரணமாக பலபகுதிகளிலும் குடியிருப்புகளிலும் தண்ணீர் புகுந்துள்ளது. அரசும், பல்வேறு அரசியல் கட்சியினரும், போர்க்கால அடிப்படையில் மக்களை மீட்டு வருவதோடு, அவர்களுக்கான உதவிகளையும் செய்துவருகின்றனர். இந்நிலையில், சென்னைப் பெருமழையில் அரசு மெத்தனமாகச் செயல்படுவதாக கிண்டலாக முகநூலில் பதிவிட்டிருக்கிறார் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன்.

வானதி சீனிவாசனின் முகநூல் பதிவு
வானதி சீனிவாசனின் முகநூல் பதிவு

எதிர்க்கட்சியாக இருந்தபோது மோடி அரசின் இந்தித் திணிப்பை எதிர்க்கும் விதத்தில், ‘இந்தி தெரியாது போடா’ என்னும் கோஷத்தை முன்வைத்தது திமுக. அந்தக் கட்சியினர் மட்டுமல்லாது, தமிழ் உணர்வாளர்களில் சிலரும் இந்த வாசகம் எழுதிய டீ-ஷர்ட்டையும் அணிந்து வலம் வந்தனர். இப்போது அதே பாணியில், சென்னைப் பெருமழைக்கு ’டீ-ஷர்ட்’ அரசியலை கையில் எடுத்துள்ளார் பாஜகவின் வானதி சீனிவாசன்.

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

அவர் தன் முகநூல் பக்கத்தில், ‘சென்னையில் நிலவும் பெருவெள்ளத்தைக் கையாள்வதில் இருக்கும் அரசின் மெத்தன நடவடிக்கைகளுக்கு எதிராக ‘நீச்சல் தெரியாது போடா’ என்ற வாசகம் தாங்கிய டீ-ஷர்ட்கள் பெருமளவில் மக்களால் விரும்பி அணியப்படுகிறது’ என பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவிலேயே சென்னை, வெள்ளத்தில் மிதப்பது போல் சில படங்களையும் பகிர்ந்துள்ளார். இவர் இந்தப் பதிவை வெளியிட்டதுமே பாஜகவினர் பலரும் விருப்பம் தெரிவித்தனர்.

ஆனால், சென்னைவாசிகளோ சென்னையில் யாருமே இப்படி டீ-ஷர்ட் அணிந்து இதுவரை நாங்கள் பார்க்கவில்லையே... இதிலுமா அரசியல் செய்வீர்கள்? என எதிர்மறை கருத்துகளால் வானதியை அர்ச்சனை செய்துவருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in