‘பீஸ்ட்’ வழியே போதை விழிப்புணர்வு: கலக்கும் கன்னியாகுமரி காவல்துறை!

அந்த மீம்ஸ்
அந்த மீம்ஸ்

குற்றங்களைக் களையும் வகையிலும், விழிப்புணர்வு விஷயங்களை மக்கள் மத்தியில் கொண்டுசேர்க்கும் வகையிலும் தமிழக காவல்துறை பல்வேறு நவீன உத்திகளைக் கையாண்டு வருகிறது. அந்தவகையில் இணைய வாசிகளை ஈர்க்கும் விதமாக மீம்ஸ் வழியாகவும் விழிப்புணர்வு களைகட்டுகிறது. அதில் லேட்டஸ்டாக விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தை மையமாக வைத்து குமரி மாவட்டக் காவல்துறையினர் வெளியிட்டிருக்கும் விழிப்புணர்வு மீம்ஸ் பலரையும் கவனிக்க வைத்துள்ளது.

கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக ’பீஸ்ட்’ படம் பெரும் வெற்றிபெற்றுள்ளது. அதேசமயம் இன்றைய இளைஞர்கள் மத்தியில் பீஸ்டின் தாக்கம் அதிகமாகவே உள்ளது. இப்படியான சூழலில் தமிழகக் காவல்துறை தடைசெய்யப்பட்ட குட்கா, புகையிலை, கஞ்சா ஒழிப்புப் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. அதன் ஒரு அங்கமாக கன்னியாகுமரி மாவட்டக் காவல்துறையும் இதற்கென பிரத்யேகமாக வாட்ஸ் அப் எண்ணை அறிவித்து அதன் மூலம் புகார் கொடுக்கலாம் என அறிவித்திருந்தது.

இந்நிலையில் பீஸ்ட் திரைப்படத்தின் காட்சிகளை மையமாக வைத்து, விழிப்புணர்வு மீம்ஸ் வெளியிட்டுள்ளது குமரி காவல்துறை. அதில் விஜயும், யோகிபாபுவும் பேசிக்கொள்வது போல் இருக்கிறது. அதில் யோகிபாபு விஜய்யிடம், ‘எங்க வீட்டு பக்கத்துல கஞ்சா, குட்கா எல்லாம் விக்கிறாங்க. பயமா இருக்கு அண்ணே’ எனச் சொல்வது போலவும், பதிலுக்கு விஜய், ‘விக்கிறாங்களா... 7010363173-க்கு வாட்ஸ் அப் மெசேஜ் பண்ணி தகவல் கொடு. பயங்கரமா ஆக் ஷன் இருக்கும்’ என சொல்வது போலவும் இந்த மீம்ஸ் உள்ளது. காவல்துறை வெளியிட்டுள்ள இந்த மீம்ஸை, விஜய் ரசிகர்கள் பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in