
மோகன் ஜியின் அடுத்த படமான ‘ருத்ர தாண்டவம்’ ட்ரெய்லர் வெளியாகியுள்ளது பார்த்தீங்களா..?’ ‘நீங்க முதல்ல ராகவனின் ‘தாண்டவம்’ பார்த்தீங்களா?’ கடந்த வாரம் இணையத்தில் நெட்டிசன்களின் அநேக உரையாடல்கள் இதுவாகத்தான் இருந்தது. பாஜக பிரமுகரான கே.டி.ராகவன் சம்பந்தப்பட்ட இந்த வில்லங்க வீடியோவை, பாஜக தலைவர் அண்ணாமலை சொன்னபிறகே வெளியிட்டதாக யூ டியூப் சேனல் நடத்தும் மதன் ரவிச்சந்திரன் சொல்லி இருக்கிறார். ஆனால், அண்ணாமலை இதை வேறுவிதமாகச் சொல்கிறார். உண்மை எதுவாக இருந்தாலும் இந்த வீடியோவால் தமிழகத்தில் பாஜகவுக்கு பெரும் சரிவுதான். திமுக ஆதரவாளர்களும் மீடியாக்களும் இந்த விவகாரத்தைப் பெரிய அளவில் சர்ச்சையாக்கி உள்ளனர். இந்த நிலையில், இன்னும் 13 வீடியோக்கள் இருப்பதாகச் சொல்லி நெட்டிசன்களை ஆவலுடன் காக்க வைத்திருக்கிறார் மதன்ஸ்! பதிலுக்கு, தமிழன் பிரசன்னா, பெரிய கருப்பன் தொடங்கி... ஆந்திர கவர்னராக இருந்த என்.டி.திவாரி வரை வில்லங்க விவாத பட்டியலுக்குள் இழுத்து ‘இதுக்கு என்ன சொல்றீங்க?' என்று எதிர்கொக்கி போடுகிறார்கள் காவி பார்ட்டிகள்.
***
We’re glad you’re enjoying this story. Subscribe to any of our plans to continue reading the story.