பீதி கிளப்பும் தாலிபான்!

பீதி கிளப்பும் தாலிபான்!

ஆப்கானிஸ்தானை தாலிபான் பயங்கரவாத அமைப்பினர் கைப்பற்றிய செய்தி வெளியானதுமே, உலக நாடுகள் முழுவதிலும் ஒருவித பதற்றம் பரவ ஆரம்பித்தது. அடுத்தடுத்து, இணையத்திலும் ஊடகங்களிலும் வெளியான வீடியோக்களும் புகைப்படங்களும் அதை மேலும் அதிகரித்தன. ஒருபக்கம் தாலிபான்களின் துப்பாக்கி ஏந்திய கூட்டங்கள் ஆப்கன் வீதிகளில் மக்களை பயமுறுத்தும் காட்சிகள். மறுபக்கம் ஆப்கனை விட்டு வெளியேற அமெரிக்க விமானங்களில் தொங்கிக் கொண்டிருந்த மக்கள் திரள் காட்சிகள். ஆப்கன் மக்களின் இந்த நிலை உலக மக்களின் மனங்களைக் கலங்கடித்தது. இணையத்தில் பலரும் அவர்களுக்காகக் குரல் எழுப்பினர்.  இணையத்தில் ஆப்கன் குறித்த செய்திகளும், பதிவுகளும்தான் நிறைந்து கிடக்கின்றன. தாலிபான்களோ,  “யாருக்கும் எங்களால் அச்சுறுத்தல் இருக்காது, பயப்பட வேண்டாம். பெண்கள் பாதுகாப்பாக இருப்பார்கள். அனைவருக்குமான உரிமைகள் ஷரியத் சட்டப்படி வழங்கப்படும்” என்கின்றனர். ஆனாலும், உலகமே பீதியில் உறைந்து போயிருக்கிறது. ஆப்கனில் நடக்கும் ஒவ்வொரு அசைவும் உலக நாடுகளை அசைத்துக் கொண்டிருக்கிறது.  

***

மேலும் வாசிக்க விருப்பமா?

இந்த கட்டுரை தங்களுக்குப் பிடித்திருப்பதில் மகிழ்ச்சி. மேற்கொண்டு வாசிக்க சந்தாதாரர் ஆகுங்கள்.

Already have an account? Sign In

Related Stories

No stories found.