‘வாத்தியார்’ படும் பாடு!

‘வாத்தியார்’ படும் பாடு!

‘வாத்தியாரே’... இந்த வார்த்தையை இணையத்தில் பார்க்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. சார்பட்டா பரம்பரையில் ஆர்யாவும், பசுபதியும் சைக்கிளில் போகும் அந்தக் காட்சியை மீம் கன்டென்டாக மாற்றி எதற்கெல்லாம் பயன்படுத்த முடியுமோ எல்லாவற்றுக்கும் பயன்படுத்தி வைரலாக்கி வருகிறார்கள். இந்த மீம்களில் சிக்காதவர்களே இல்லை. முக்கியமாக, கலைஞர், சீமான், சாட்டை துரைமுருகன், மோடி ஆகியோருடைய மீம்களெல்லாம் வேற லெவல் என்று சொல்லலாம். காவல் துறையினர் கூட மாஸ்க், ஹெல்மெட் விளம்பரங்களுக்கு இந்த மீம்களை பயன்படுத்துகிறார்கள். போன வருடம் கண்ணம்மாவை வயிற்றில் குழந்தையோடு நாடு நாடாக சுற்ற வைத்தார்கள் மீம் கிரியேட்டர்கள். இப்போது ஆர்யாவை பசுபதியோடு சைக்கிளில் ஊர் ஊராக சுற்றவைத்துக்கொண்டிருக்கிறார்கள். யப்பா மீம் க்ரியேட்டர்களா... அதகளம் பண்றீங்கப்பா!

****

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற திமுகவை வலியுறுத்தி சென்னையில் 17-ம் தேதி ஆர்ப்பாட்டம்.- ஜி.கே.வாசன்

அப்படியே இந்த ஏழு வருடத்தில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத பாஜக பக்கமும் சைக்கிளைத் திருப்பறது...?- ரஹீம் கஸ்ஸாலி

****

வெள்ளை அறிக்கை குறித்து சொல்ல வேண்டிய இடத்தில் சொல்வேன். - ஓ.பன்னீர்செல்வம்

டெல்லிக்கு டிக்கெட் போட்டுட்டாரு போல...- ஷிவானி சிவக்குமார்

***

கடந்த 6 ஆண்டுகளில் பருப்பு உற்பத்தி சுமார் 50 சதவீதம் அதிகரித்துள்ளது!- பிரதமர் மோடி

அதான்... எக்கச்சக்கமா ‘வடை' சுட்டுக்கிட்டே இருக்கீங்களா ஜீ..?!- மயக்குநன்

***

சட்டப்பேரவை தொடங்க உள்ள நிலையில் முன்கூட்டியே வெள்ளை அறிக்கை வெளியிட்டது ஏன்? - ஜெயக்குமார்

ஆபீஸ் ரூம்ல வெச்சு விசாரிக்கத்தான் சென்றாயன்!- குமார்

***

அன்புமணியை முதல்வராக்க முடியவில்லை என்ற வருத்தம், ஏக்கம், கனவு என்னை வாட்டுகிறது. - ராமதாஸ்

அதனால தான் மாத்தி மாத்தி கூட்டணி வச்சுட்டே இருக்கீங்களா அய்யா..?- சரவணன். எம்

***

தயாநிதி மாறனுக்கு வாய்க்கட்டுப்பாடு வேண்டும். எங்களுடைய அரசியல் வேறு மாதிரி இருக்கும்!-  பாஜக அண்ணாமலை

பால் பொங்கலாம்... பச்சை தண்ணீர் பொங்கலாமா?- தமிழ்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in