வலிமை இழக்கும் ‘வலிமை’

வலிமை இழக்கும் ‘வலிமை’

தொகுப்பு: ஜெ.சரவணன்

இவ்வளவு காலமாய், வலிமை அப்டேட் எங்கே என்று போனி கபூரை தூங்க விடாத குறையாக பாடாய் படுத்தினர் நெட்டிசன்கள். இந்நிலையில் அண்மையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. ஆனால், அது பெரிய அளவில் ஈர்க்கவில்லை. பெரிதும் கிண்டல் செய்யப்பட்டது. தற்போது படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. ‘வேற மாதிரி... வேற மாதிரி’ என்று பாடல் வரிகளை விக்னேஷ் சிவன் எழுத, அதை ஏதோ மாதிரி இசையமைத்து பாடி ஒப்பேத்தேயிருக்கிறார் யுவன் சங்கர் ராஜா. அஜித் போன்ற நடிகரின் படத்தின் முதல் பாடல் இவ்வளவு மொக்கையாகவா இருக்கும் என்றும் சலித்து கொட்டுகிறார்கள் நெட்டிசன்கள். ஆனால் அஜித் ரசிகர்கள், “சிம்டாங்காரன் பாட்டு மட்டும் என்ன ஒழுங்கா” என்று விஜய் ரசிகர்களை சீண்டினர். நா.முத்துக்குமார் இல்லாத யுவனின் இசை அம்மா இல்லாத அதிமுக மாதிரி தடுமாறிட்டு இருக்கு என்று சிலரும், விக்னேஷ்சிவன் ஏதோ நாலு வரியைப் போட்டு மொக்கையா வேணா நீ எழுதலாம்... அதுக்காக லிரிக்ஸ்ட் விவேக் அளவுக்கெல்லாம் எழுத முடியாதுப்பா. ஆஸ்கார் நாயகன் மியூசிக்கையே மொக்க பண்ற அளவுக்கு வித்தைக்காரன்ப்பா அவன் என்று ஒருபக்கமும் கிண்டலடிக்கிறார்கள். ‘அப்டேட் எங்கனு திட்ராய்ங்க, அப்டேட் விட்டாலும் திட்ராய்ங்க’ என்று கலங்கிப் போயிருக்கிறாராம் போனி.

***

மக்கள் தங்கள் கருத்துகளைக் கூறுங்கள். அது செங்கோட்டையில் எதிரொலிக்கட்டும்!- மோடி

எட்டு மாசமா விவசாயிகள் கதறிக்கிட்டு இருக்காங்களே... அது உங்க காதுல ஒலிக்கலையா..?!- லட்சுமணன்

***

மேகேதாட்டு குறித்து பேச திமுகவுக்கு தகுதியில்லை.- எச்.ராஜா

இதுக்கும் நீட் தேர்வு மாதிரி, ஏதாவது தகுதித் தேர்வு எழுதி பாஸ் பண்ணி இருக்கணுமோ!- அமுது

***

சிறை செல்லவும் தொண்டர்கள் தயாராக இருக்க வேண்டும்.- எஸ்.பி.வேலுமணி

தொண்டர்கள் : நீங்க சம்பாதிச்சு கொழுத்ததுக்கு நாங்க எதுக்குங்கணா சிறைக்குப் போகணும்?- துயிலன்

***

கலைஞர் படம் திறப்பு விழா... அதிமுக புறக்கணிப்பு!- செய்தி

அது சரி... இரும்பு அடிக்கிற இடத்துல ஈக்கு என்ன வேலை?- நெல்லை அண்ணாச்சி

***

திமுக பொய்யான தேர்தல் வாக்குறுதியை அளித்து ஆட்சியை பிடித்துள்ளது.- ஈபிஎஸ்

உண்மையான தேர்தல் வாக்குறுதியை அளித்த தால் தான் அதிமுகவால் ஆட்சியை பிடிக்க முடியலையோ?- தமிழ்

***

உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ளத் தயார்.- ஓபிஎஸ் 

அமித் ஷாவை சந்திச்சதும் தெம்பு வந்துடுச்சு போல..!- தர்ம அடி தர்மலிங்கம்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in