சர்ச்சை கிளப்பிய ‘சார்பட்டா’

சர்ச்சை கிளப்பிய ‘சார்பட்டா’

சமீபத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படம் பல்வேறு விவகாரங்கள் சார்ந்து சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. எழுபதுகளில் வடசென்னையில் நடக்கிற குத்துச் சண்டை விளையாட்டையும், பாக்சிங் பரம்பரைகளுக்குள் இருக்கும் பகை உணர்வையும் கதைக்களமாகக் கொண்ட இத்திரைப்படம் இடையிடையே அப்போதைய காலகட்டத்தில் நடந்த அரசியல் நிகழ்வுகளையும் பதிவு செய்துள்ளது. முக்கியமாக, இந்திரா காந்தி எமர்ஜென்சியை அமல்படுத்தியதும், தமிழகத்தில் அப்போது ஆட்சியில் இருந்த திமுக அதற்கு எதிராகக் குரல் கொடுத்ததையும் குறிப்பிட்டுச் சொல்லலாம். இதனால் இப்படத்தை திமுக ஆதரவாளர்கள் பாராட்டி வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் எமர்ஜென்சியை ஆதரித்த எம்ஜிஆர் மற்றும் அதிமுகவை இணையத்தில் மீம்கள் மூலமாகவும், கருத்து பதிவுகள் மூலமாகவும் கிண்டல் செய்தும் வருகிறார்கள். இதனால் அப்போதைய அரசியல் வரலாறு மீண்டும் தோண்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. தொடர்ந்து தனது திரைப்படங்களின் மூலம் பல்வேறு சமூக பிரச்சினைகளைப் பேசிவரும் இயக்குநர் பா.இரஞ்சித், இந்தப் படத்தின் மூலம் நேரடியாக அரசியல் பேசியிருக்கிறார். இதனால் ‘சார்பட்டா’ குறித்த விவாதங்கள் தொடர்கின்றன.

***

அதிமுகவில் யாரும் அதிருப்தியில் இல்லை. டெல்லியில் எடப்பாடி பழனிசாமி பேட்டி.- செய்தி

ஏன், இதை டெல்லியில போயி தான் சொல்லணுமா... தமிழ்நாட்டுல சொன்னா ஏத்துக்கமாட்டாங்களா..?!- மித்ரன்

***

அமித்ஷாவிடம் அரசியல் பேசவில்லை. - ஈ.பி.எஸ்

வேற... சசிகலாவிடம் இருக்கும் போனை பிடுங்கி வைக்கச்சொல்லியிருப்பாரோ?!-- ரஹீம் கஸ்ஸாலி

***

ஆட்சிக் கவிழ்ப்பின்போது எனது செல்போன் ஒட்டுக் கேட்கப்பட்டிருக்கலாம்: புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி சந்தேகம்

இதையே இப்பதான் கண்டுபிடிக்கிறாரு - ஜீ மைண்ட் வாய்ஸ்.- மெத்த வீட்டான்

***

எங்கள் முயற்சியும், சசிகலாவின் முயற்சியும் அதிமுகவை மீட்க வேண்டும் என்பதுதான்.- டிடிவி தினகரன்

ஓபிஎஸ் ஈபிஎஸ் டெல்லியில போய் அடகு வச்சத சொல்றாரு போல!- ஹாஜா

***

பருவநிலை மாற்றத்துக்கு எதிரான போரை பிரதமர் மோடி தலைமையேற்று நடத்துகிறார்.- அமித் ஷா

இந்தப் போரில் எத்தனை தல உருளப் போகுதோ.- அமுது

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in