செய்திகள் வாசிப்பது ‘ரித்விக்’

செய்திகள் வாசிப்பது ‘ரித்விக்’

தொகுப்பு: ஜெ.சரவணன்

கடந்த வாரம் இணையத்தில் அதிகம் பகிரப்பட்ட விஷயமாக, ரித்விக் என்ற சிறுவனின் சேட்டை வீடியோக்களைச் சொல்லலாம்.  “நான் தனியறையில் இருப்பதால் முகக்கவசம் அணியவில்லை” என்று செய்தியாளர்களைக் கலாய்க்கும் விதமாக, கவனம் ஈர்க்க ஆரம்பித்த ரித்விக்கின் வீடியோக்கள் அனைத்தும் அடுத்தடுத்து வைரலாயின. வீடியோக்களில் கலக்கிய சிறுவனும் சிறுமியும் வெவ்வேறு ஆள் என நினைத்த நிலையில், சிறுமி வேடத்தில் பேசியதும் ரித்விக்தான் என்பது பலருக்கும் பின்னர்தான் தெரிந்தது. அவனுடைய குரல் இருவருக்கும் பொருத்தமாக இருந்ததோடு, பாவனைகள், நடிப்பு என அனைத்திலும் சுட்டித்தனமும் அழகும் காணப்பட்டதால் பலரின் இதயங்களைக் கொள்ளையடித்தான் ரித்விக். அதேசமயம் தன் பெற்றோர் சொல்லித்தான் இதையெல்லாம் பேசியதாக ரித்விக் சொன்னதும்,  குழந்தைகளை இந்த வயதிலேயே இப்படி பிரபலமாக்க அழுத்தம் தருவது அவர்களின் அழகான குழந்தைமையை இழக்கச் செய்துவிடும் என்று சிலர் ஆதங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

***

சசிகலா அப்போலா மருத்துவமனை வருகையால், ஈபிஎஸ் அங்கிருந்து வேகமாக வெளியேறினார் - செய்தி

ஆஸ்பத்திரின்னு கூட பாக்கலயே... எடுத்தேன் பாரு ஓட்டம்... இங்க வந்துதான் நின்னேன்!-ஷிவானி சிவக்குமார்

***

சசிகலாவால் ஒருபோதும் அதிமுக-வை வீழ்த்த முடியாது - எடப்பாடி பழனிசாமி

நாங்களே போதும்னு சொல்றாரு போல! -மெத்த வீட்டான்

***

ஒட்டுக் கேட்க வேண்டிய அவசியம் பாஜகவுக்கு இல்லை - அண்ணாமலை

சாரி தல... ஓட்டுனு படிச்சிட்டேன்!- சப்பாணி

***

ஊடக நெறிமுறைகள் பற்றி நான் பேசியதை தவறாகச் சித்தரித்துள்ளார்கள் - அண்ணாமலை

சொன்னது நான் இல்ல... அட்மின்னு சொல்லாம விட்டீங்களே... அதுவே பெரிய விஷயம்!- மித்ரன்

***

நான் ஜெ அக்காவை ‘குட்டிப்பையா’ என்று தான் அழைப்பேன்.-சசிகலா

வாயில வடை சுடுறதுல அதிபர்க்கே டஃப் கொடுப்பாங்க போலயே!-அஜ்மல் அரசை

***

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசு. - அதிமுக

ஆமால்ல... ஈபிஎஸ்ஸை ஜெயிலுக்கு அனுப்புவோம்னு ஸ்டாலின் வாக்குறுதி குடுத்தார்ல?-கிப்சன்

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in