ஆடிப்போன ‘ஆடி’ கார்!

ஆடிப்போன ‘ஆடி’ கார்!

பப்ஜி விளையாட்டில் ஆபாசமாகப் பேசியே பிரபலமான மதன் கைது செய்யப்பட்டு, அவர் மீது குண்டர் சண்டத்தில் நடவடிக்கை எடுக்க சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டார். இந்நிலையில், மதனுடைய மனைவி கிருத்திகாவின் பேட்டியால் மீண்டும் இணையத்தில் வைரலானார் பப்ஜி மதன். “மதன் தினமும் 20 மணி நேரம் உழைப்பார். அவர் பப்ஜி விளையாடியதன் மூலம்தான் சம்பாதித்தார். வேறு வகையில் சம்பாதிக்கவில்லை” என்று கூறியவர், “எங்களிடம் சொகுசுக் கார் இல்லை. ‘ஆடி ஏ 6’ கார் தான் இருக்கிறது” என்றார். ஏது, ‘ஆடி ஏ 6’ கார் சொகுசுக் கார் இல்லையா என்று ஆடி நிறுவனமே ஆடிப் போகும்படி இருந்தது கிருத்திகாவின் பேட்டி. “இஸூசு மாதிரி சொகுசுங்கறதும் ஒரு காரின் பெயர் என்று நினைத்துவிட்டார் போல பப்ஜி மதனின் மனைவி. அதான் ஆடி என்ற கம்பெனி கார் எங்களிடம் இருக்கு. சொகுசு என்ற கம்பெனி கார் எங்களிடம் இல்லையென்று சொல்லியிருக்கிறார்” என்று கிண்டல் செய்தார்கள் இணையவாசிகள். சில ஊடகங்கள் ஆடி காரின் விலைப் பட்டியலைப் பகிர, இதனால் அதுவும் ஒருபக்கம் வைரலானது. மதனின் மனைவியால் ஆடி நிறுவனத்துக்கு இலவச விளம்பரம்!

****

20 மணி நேரம் உழைத்துச் சம்பாதித்தார் பப்ஜி மதன். - மதனின் மனைவி கிருத்திகா

ஆபாச வார்த்தைகள் பேசுறதையெல்லாம் இப்ப உழைப்பில் சேர்த்துட்டாங்க போல...!- ரஹீம் கஸ்ஸாலி

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in