தளபதிகளின் ‘பீஸ்ட்டு’ மோடு!

தளபதிகளின் ‘பீஸ்ட்டு’ மோடு!

கடந்த வாரம் தளபதிகளின் வாரம் என்றே சொல்லலாம். தளபதி விஜய்யின் பிறந்தநாள் அன்று சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கும் ‘பீஸ்ட்’ படத்தின் ஃபர்ஸ்ட் மற்றும் செகண்ட் லுக் புகைப்படங்கள் வெளியாகி அனைத்து சமூக வலைதளங்களிலும் வைரலாயின. இதனால் கடுப்பான அஜித் ரசிகர்கள், வலிமை அப்டேட் கேட்டு மேலும் விஜய் புகைப்படத்தை ட்ரெண்டாக்கினர். மறுபக்கம் முதல்வர் மு.க. ஸ்டாலினின் அடுத்தடுத்த அதிரடியான நடவடிக்கைகள் வைரலாயின. குறிப்பாக, ஆளுநர் உரை குறித்த செய்திகள் அதிகம் பகிரப்பட்டன. அதில் தமிழக அரசின் பொருளாதார ஆலோசனைக் குழுவில் ரகுராம் ராஜன், அரவிந்த் சுப்ரமணியன், எஸ்தர் டஃப்லோ, ஜீன் ட்ரெஸ், டாக்டர் எஸ். நாராயண் ஆகியோர் இடம்பெற்றுள்ளதாக வெளியான அறிவிப்பு பலரின் பாராட்டுகளைப் பெற்றது. இதனால் கடந்த வாரம் இரண்டு தளபதிகளின் பீஸ்ட்டு மோடில் சும்மா... தெறித்தது இணையம்!

******************

ஆளுநர் உரையை துருவித் துருவிப் பார்த்தேன், எதுவும் தென்படவில்லை. - ஓபிஎஸ்
துருவிப் பார்க்க அது என்ன தேங்காயா? படிச்சுப் பார்த்தால்தான் தெரியும்!- மெத்த வீட்டான்

**********************

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in