இணையத்தை கலக்கிய நகைக் கடையும் ஜவுளிக் கடையும்

இணையத்தை கலக்கிய நகைக் கடையும் ஜவுளிக் கடையும்

தேர்தல் பரபரப்புச் செய்திகளுக்கு மத்தியில், வேறு சில விஷயங்களும் வெகுஜனத்தின் கவனத்தை வெகுவாக ஈர்த்துவிடுகின்றன. அப்படி கடந்த வாரம் இணையத்தில் ட்ரெண்டான விஷயங்கள்தான் ஜவுளிக்கடையும், நகைக் கடையும். நடமாடும் நகைக் கடையான ஹரி நாடார் ‘பனங்காட்டு படை’ என்ற அரசியல் கட்சியை நடத்துவதோடு தற்போது ஆக்டிங்கிலும் குதித்துள்ளார். அவர் நடிக்கும் ‘2K அழகானது காதல்’ என்ற படத்துக்கான பூஜை கடந்தவாரம் போடப்பட்டது. இதில் ‘பிக்பாஸ்’ வனிதா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ட்ரெண்டான மற்றொருவர் நம்ம ஜவுளிக்கடை அண்ணாச்சி லெஜண்ட் சரவணன். அவர் நடிக்கும் படத்தின் ஸ்டில்ஸ் வெளியாகி பரவலாக வைரலானது. ரஜினி-கமல், விஜய்-அஜித், விக்ரம்-சூர்யா இப்படி ஹரிநாடார்-லெஜண்ட் சரவணன் இருவரும் எதிர்காலத்தில் சினிமாவில் கடும் போட்டியாளர்களாக வந்தாலும் வரலாம்!

குளிர்காலம் முடிவில் பெட்ரோல், டீசல் விலை குறையும். - மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்

ஏன் அப்பதான் கப்பல் கரைக்கு வருமா..?!- மித்ரன்

காலில் விழுந்து கேட்கிறேன் காசுக்கு ஓட்டு போடாதீங்க, - சரத்குமார்

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in