தமிழ் பட்ட பாடு! தமிழில் பதவியேற்பு

தமிழ் பட்ட பாடு! தமிழில் பதவியேற்பு

கடந்த வாரத்தில்  கல்லூரி மாணவர்களின் பஸ் டே அலப்பறை வீடியோ ஒரு பக்கம் வைரலானால், மறுபக்கம் விஜய்யின் 63 படத்தின் அப்டேட் குறித்த தகவல் வெளியாகி வைரலானது. இன்னொரு பக்கம் அமலாபாலின்  ‘ஆடை’ படத்தின் டீசர் வெளியாகி யூ-டியூபில் இரண்டே நாளில் 40 லட்சம் பார்வைகளைத் தாண்டியது. இதுபோக தண்ணீர்த் தட்டுப்பாடு குறித்து அரசியல்வாதிகளின்  ‘அறிவார்ந்த’ அறிக்கைகளும், அதற்கு நெட்டிசன்களின் பதிலடிகளும் எனக் கடந்த வாரம் இணைய உலகில் ஒரே வைரல் மயம்தான்.

இத்தனை வைரல்கள் இருந்தும், நாடாளுமன்றத்தில் பதவியேற்ற தமிழக எம்பிக்கள்  “தமிழ்வாழ்க” என்று கோஷமிட்டுவிட்டு ஆங்கிலத்தில் கையெழுத்துப் போட்டதை இணையத்தில் வறுத்து எடுத்தனர்.   “பெரும்பாலான எம்பி-க்கள் தாய்மொழியில் பதவியேற்றுக்கொண்டாலும் ஆங்கிலத்தில்தான் கையெழுத்திட்டனர். பொதுமொழியாக ஆங்கிலம் ஆகிவிட்ட பிறகு தமிழில் ஏன் கையெழுத்துப் போடவில்லை எனக் காய்ச்சுவதெல்லாம் என்ன வகையான எதிர்வினை என்றே தெரியவில்லை” என்று எதிர்வினையாற்றினார்கள் பலர். 

எம்ஜியார் வாழ்க, ஜெயலலிதா வாழ்க, வந்தே மாதரம் என்று சொல்லி எம்பி-யாக பதவியேற்றார் ரவீந்திரநாத்.

- செய்தி

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in