உலக டிரெண்டிங்கில் உலக நாயகன்!

உலக டிரெண்டிங்கில் உலக நாயகன்!

கட்சி தொடங்கிய நாளிலிருந்தே வழக்கமான அரசியல் பாணி இல்லாமல் வித்தியாசம் காட்டி வருகிறார் கமல். முன்பெல்லாம் இலை மறை காயாகப் பேசி வந்தவர் இப்போதெல்லாம் அதிரடியாகத் தாக்குகிறார். சமீபத்தில் அவர்,  “காந்தியைச் சுட்டுக்கொன்ற கோட்சே சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி” என்று குறிப்பிட்டது டெல்லி வரைக்கும் எதிரொலித்தது. என்ன கருத்து என்பதை விட யார் சொல்கிறார் என்பதைப் பொறுத்து பதில் சொல்லும் பிரதமர் மோடியையே புலம்ப வைத்துவிட்டார் கமல். மோடியே கருத்துச் சொன்ன பிறகு அடிவிழுதுகள் சும்மா இருப்பார்களா? ஆளாளுக்கு கமலுக்குக் கண்டன அறிக்கை வாசித்தனர். அதிலும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி,  “மக்கள் கமலின் நாக்கை அறுக்கத் துணிவார்கள்” என வாயை விட்டு சர்ச்சையில் சிக்கினார்.  “கமால் ஹுசைன் (கமல் ஹாசன்) இந்து மதத்தைப் பற்றி இப்படிப் பேசுவதில் வேறு உள்நோக்கங்கள் இருக்கின்றன” என்றும்,  “காந்தியைக்  கொன்றவன் மட்டும் தீவிரவாதி என்றால், ராஜீவ் காந்தியோடு சேர்த்து இன்னும் சிலரையும் வெடிகுண்டால் கொன்றவர்கள் தீவிரவாதிகள் இல்லையா? அதைப்பற்றி கமல் பேசட்டுமே... பார்க்கலாம்” என்றும் விதவிதமான தாக்குதல்கள் இணையத்தில் தொடர்ந்தன. இதனால், சினிமாவில் மட்டுமல்ல... அரசியலிலும் உலக நாயகன் ஆகிவிட்டார் கமல்.

கமல்ஹாசனின் சர்ச்சை பேச்சு பற்றி கருத்துக் கூற விரும்பவில்லை.

- ரஜினிகாந்த்

அப்படியே சொல்லிட்டாலும்... சும்மா போங்க பாஸ்..!- தீம்கா காரன்

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in