பெண்ணே பெண்ணுக்கு எதிரியா?

பெண்ணே பெண்ணுக்கு எதிரியா?

ஹரியாணாவில் நடந்த ஒரு சம்பவம் கடந்த வாரம் இணையத்தில் வைரலானது. மால் ஒன்றில் குட்டையான மாடர்ன் உடை அணிந்த இளம்பெண்களை நடுத்தர வயது பெண்மணி ஒருவர் சரமாரியாகத் திட்டு கிறார். அத்துடன், ஆண்கள் சிலரிடம்  “இவர்களைப் பலவந்தம் செய்யுங்கள்” என்றும் சொல்கிறார். இதனால் கொந்தளித்துப்போன அந்த இளம் பெண்கள் அவரோடு வாக்குவாதம் செய்து, அவரை மன்னிப்புக் கேட்க வலியுறுத்துகின்றனர். இவை அனைத்தும் அப்படியே வீடியோவாகி சமூக வலைதளத்தில் பெரும் வைரலானது. இதை மூன்று நாட்களில் 25 லட்சம் பேர் பார்த்துள்ளனர். ஒரு பெண் குட்டை பாவடை அணிந்திருப்பது அந்தப் பெண்ணை பலாத்காரம் செய்வதற்குப் போதுமான காரணமாக எடுத்துக்கொள்ளலாமா என்பதுதான்  இளம்பெண்கள் எழுப்பும் கேள்வி. பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல் குற்றங்களுக்கு அவர்களுடைய உடையையும் நடத்தையையும் காரணமாகச் சொல்வதை சமூகம் நிறுத்த வேண்டும் என்று பேசிவரும் சமயத்தில், பெண்களே பல சமயங்களில் பெண்களுக்கு எதிராக இருப்பதுதான் விசித்திரமாக உள்ளது.

‏மழை வேண்டி கோயில்களில் யாகம் செய்யுமாறு அறநிலையத் துறை உத்தரவு!

உங்க நீர் மேலாண்மையைப் பாராட்ட வார்த்தையே இல்லை!

- நெல்லை அண்ணாச்சி

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in