தங்கம் வென்ற தங்கங்கள்!

தங்கம் வென்ற தங்கங்கள்!

கடந்த வாரத்தில் பல்வேறு செய்திகளுக்கு மத்தியில் இன்றைய தலைமுறைக்கு நம்பிக்கையூட்டும் விதமாக அமைந்தது கோமதி, சித்ரா ஆகிய இருவரின் இமாலய வெற்றி. எந்த அடையாளங்களும் இல்லாமல், யார் என்ற முகவரிகூட தெரியாமல் இவர்கள் இருவரும் தாய்நாட்டுக்காகப் பெருமை சேர்த்து இன்று உலக பிரபலமாகி இருக்கிறார்கள். ஆசிய தடகள போட்டியில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்து, திருச்சி அருகே முடிகண்டத்தைச் சேர்ந்தவர். மகள் தங்கம் வென்ற விஷயம் அம்மாவுக்கே அடுத்தவர் சொல்லித்தான் தெரிகிறது. கோமதி இதுவரை வாங்கிய பதக்கங்களுடன் அந்தத் தாயின் புகைப்படமும் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வைரலாயின. கேரளாவைச் சேர்ந்த சித்ரா 1500 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தங்கம் வென்றுள்ளார். அப்பா கூலித் தொழிலாளி. வாட்டும் வறுமையிலும் சாதிக்கும் வல்லமையையும் நம்பிக்கையையும் இவர்களைப் போன்றவர்களே அடுத்த தலைமுறைக்குக் கடத்துகிறார்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in