விண்வெளியில் சுட்ட வடை!

விண்வெளியில் சுட்ட வடை!

தொகுப்பு: தேவா

வால் போய் கத்தி வந்த கதையாக அபிநந்தன் போய் இப்போது மிஷன் சக்தி வந்துவிட்டது. ஏற்கெனவே தமிழகத்தில் எது தேசிய கட்சி, எது மாநில கட்சி என்று குழம்பும் அளவுக்குக் கட்சிகளின் அரசியல் வண்டவாளங்கள் தண்டவாளத்தில் ஏறிக்கொண்டிருக்கிறன்றன. இதற்கிடையில், சின்னங்களுக்கான போட்டி வேறு. இதில், வாக்காளர்களைக் கவர புதிது புதிதாய் பிளான் போடுகிறார் நமது பிரதமர் என்கிறார்கள் நெட்டிசன்கள். வாயில் வடை சுட்டது பத்தாது என்று விண்வெளிக்கே போய் வடை சுடுகிறார் என்று நேரடியாகவே விமர்சிக்கிறார்கள். ஆனாலும் எப்படியோ தொடர்ந்து தன்னைப்பற்றி பேச வைத்துவிடுகிறார் மோடி. இதனாலேயே தொடர்ந்து இணையத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கிறார் அவர். சர்க்கார் படத்தில் விஜய் சொல்லும் நெகட்டிவ் மார்க்கெட்டிங் பாணி மோடிக்கு எந்த அளவுக்கு போணி ஆகும் என்பது தேர்தல் முடிவுகளில்தான் தெரியும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in