உலகம் சுற்றும் சவுக்கிதார்!

உலகம் சுற்றும் சவுக்கிதார்!

பிரதமர் மோடியின் ஒற்றை வார்த்தை தேர்தல் பரபரப்புகளை எல்லாம் கடந்து கடந்த வாரம் முழுக்க இணையத்தில் வைரலானது.  அந்த வார்த்தை ‘சவுக்கிதார்’. இதற்கு  காவலன் என்று அர்த்தமாம். தான் நாட்டின் காவலன். மக்களின் காவலன் என்று

மோடி சொன்ன மறுநிமிடம், ட்விட்டரில் நரேந்திர மோடி பெயருக்கு முன்னும் ‘சவுக்கிதார்’ என்ற வார்த்தை சேர்க்கப்பட்டுவிட்டது. தேர்தல் வந்துவிட்டால் போதும் சின்ராச கையிலையே  பிடிக்க முடியாது என்று ஒரு பக்கம் மோடியை நெட்டிசன்கள் கலாய்க்க, மீம்களாய் பறந்தன. சவுக்கிதார் என்ற வார்த்தையை வைத்தே காங்கிரஸும் மோடியைக் கிண்டல் செய்தது. மோடியைப் பின்பற்றி பல விசுவாசிகள் தங்களுடைய பெயருக்கு முன்னாலும் சவுக்கிதார் என்ற பெயரைச் சேர்த்துக்கொண்டனர். இதனால் இணையத்தில் சவுக்கிதார் வைரலானது. இதேபோல், “தமிழச்சி தங்கபாண்டியன் போன்ற அழகானவருக்கு வாக்களியுங்கள்”  என்று உதயநிதி பேசிய வீடியோ உட்பட சில கடந்த வாரம் வைரலாகின.

நாடு பாதுகாப்பாக இருக்க மோடி தலைமையில் ஆட்சி அமைய வேண்டும்.

- எடப்பாடி பழனிசாமி

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in