மொழிபெயர்ப்புக்கு வந்த சோதனை

மொழிபெயர்ப்புக்கு வந்த சோதனை

ராகுல் கடந்த வாரம் நாகர்கோவில் பிரச்சார கூட்டத்தில் பேசியதை மொழிபெயர்க்கும் வேலையைத் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் தங்கபாலு செய்தார். சீட் கேட்டிருப்பாரோ என்னவோ... ராகுல் பேசும்போது, அவரை அடிக்கடி பார்த்துக்கொண்டே வேகமாக மொழிபெயர்த்தார் தங்கபாலு. மொழிபெயர்ப்பில் அவ்வளவு வேகம் காட்டியவர், ராகுல் காந்தி, “ I respect the people of tamil nadu” என்று கூற,  தங்கபாலு,  “நரேந்திர மோடி தமிழக மக்களின் எதிரி” என்று மொழிபெயர்த்தார். அடுத்து ராகுல், “Anil Ambani never made an aircraft in his life” என்று சொன்னதை, தங்கபாலு, “அனில் அம்பானி உண்மையைப் பேசுகிறவர் அல்ல...” என்றார். இதுபோன்ற காமெடிகளால் இந்த மொழிபெயர்ப்பு வீடியோ இணையத்தில் வைரலானது. இதென்னடா மொழிபெயர்ப்புக்கு வந்த சோதனை என்று நெட்டிசன்கள் நையாண்டி செய்தனர். அதேசமயம்,‘எச். ராஜாவின் மொழிபெயர்ப்புத் திறமைக்கு தங்கபாலு எவ்வளவோ தேவலாம்’ என்றும் பலர் கருத்து  கூறியிருந்தனர்.

திமுக  முன்னாள் அமைச்சரின் மகனுக்கு 7 ஆண்டுகள் சிறை. - செய்தி

திமுகவினர்னாலே தியாகிகள்தான... ஆயிரம் என்கொயரீஸ், ஆயிரம் என்கேஜ்மென்ட்ஸ்...- புலிவெட்டி சித்தர் பொள்ளாச்சி பலாத்காரம்... எஃப்ஐஆர் மாயம். - செய்தி

அங்க ரஃபேல் RC புக்கு, இங்க FIR புக்கு.- மீசை

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in