வங்கிக்கணக்கை பாதுகாக்கும் வழி

சைபர் மோசடிகள் அதிகரித்துவரும் நிலையில் எல்லா வகையிலும் நாம் தான் விழிப்பாகவும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும். அதன் ஒருபடியாக நம்முடைய வங்கி கணக்கிலிருந்து மோசடிகள் நடைபெறாமல் இருக்க நமது முகநூல் பக்கத்தில் இருக்கும் நமது பிறந்ததேதி, அலைபேசி எண் ஆகியவற்றை நீக்கிவிடவேண்டும் என்று சைபர் கிரைம் காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

குறிப்பாக இன்டர்நெட் பேங்கிங் வைத்திருப்பவர்கள் அனைவரும் தங்கள் முகநூல் கணக்கில் இருக்கும் பிறந்த தேதி மற்றும் அலைபேசி எண்ணை உடனடியாக நீக்கிடுமாறு போலிசார் வலியுறுத்தியுள்ளனர்.

இணையதள வசதி கொண்ட வங்கி கணக்கை ஹேக்கர்கள் எப்படி ஹேக்கிங் செய்கிறார்கள் என்பது பற்றி சைபர் கிரைம் போலீசாரின் பேஸ்புக் பக்கத்தில் உஷார் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மோசடியாளர்கள் எப்படி நம் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை திருடுவார்கள் என்பது படிப்படியாக விளக்கப்பட்டது. அவை பின்வருமாறு:

1.முதலில் ஹேக்கர்ஸ் உங்கள் பெயர் மற்றும் பிறந்த தேதியை பேஸ்புக் கணக்கிலிருந்து பெற்றுக் கொள்வார்கள்.

2.இந்தத் தகவலை வைத்துக்கொண்டு அவர்கள் வருமான வரித்துறை இணையதள முகவரிக்கு சென்று புதுப்பிப்பதன் மூலமாக உங்கள் அலைபேசி எண் மற்றும் பான் கார்டு நம்பரை பெற்று கொள்வார்கள். இதன்மூலம் அவர்களுக்கு பான் கார்டு நகல் கிடைத்துவிடும்.

3.அதன் பின்பு அவர்கள் காவல் நிலையத்தில் மொபைல் திருட்டு போய்விட்டதாக புகார் பதிவு செய்வார்கள். பின்பு பான் கார்டு மூலம் அதே எண்ணிற்கான மற்றொரு சிம் கார்டை மொபைல் கம்பெனியில் இருந்து பெற்றுக் கொள்வார்கள்.

4.அவர்கள் பெற்ற சிம்கார்டு மூலமாக இன்டர்நெட் பேங்கிங் வாயிலாக தற்போது அவர்களுக்கு உங்கள் பேங்க் அக்கவுன்டை அணுகுவதற்கு வசதியாக இருக்கும்.

5.பின்பு பேங்க் அக்கவுண்ட் இணைய முகவரிக்கு சென்று "Forgot my Password" தேர்வினை கிளிக் செய்வார்கள். அதன்மூலம் எளிதாக பின்கோடு உள்ளிட்ட அனைத்து தரவுகளும் அவர்களிடம் இருக்கும் மொபைல் எண்ணிற்கு வந்து சேரும். அவற்றைக் கொண்டு உங்களின் வங்கி கணக்கில் இருக்கும் மொத்த பணத்தையும் அவர்கள் எடுத்துக்கொள்வார்கள்.

அதனால் நம் வங்கிக்கணக்கில் இருக்கும் பணத்தை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள இன்டர்நெட் பேங்கிங் செய்துவருபவர்கள் அனைவரும் தங்கள் ஃபேஸ்புக் கணக்கில் இருக்கும் பிறந்த தேதி மற்றும் அலைபேசி எண் ஆகியவற்றை நீக்கி விடுங்கள்.

Related Stories

No stories found.