யாருக்கு என்ன கொடுப்பது என்று கட்சித் தலைமைக்குத் தெரியும்!- தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி

யாருக்கு என்ன கொடுப்பது என்று கட்சித் தலைமைக்குத் தெரியும்!- தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி

டி.கார்த்திக்
karthikeyan.di@hindutamil.co.in

திமுக அரசுக்கு எதிராகச் சமூக ஊடகங்களில் பட்டாசாக வெடிக்கும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கே.அண்ணாமலை, பாஜகவின் தமிழகத் தலைவராகியிருக்கிறார். ‘ஜெய்ஹிந்த்’ விவகாரம், ‘ஒன்றியம்’ தொடர்பான வாதங்கள் என சுழன்றடித்துக் கொண்டிருக்கும் தற்போதைய தமிழக அரசியல் சூழலில், பேட்டி என்றதும் ஆர்வத்துடன் ஒப்புக்கொண்டார். கேள்விகளைப் பொறுமையாகக் கேட்டுக்கொண்டு விரிவாக அவர் அளித்த பேட்டி:

மத்திய அரசை ‘ஒன்றிய அரசு’ என்று திமுகவினர் அழைப்பதை பாஜக ஏன் இத்தனைக் கடுமையாக எதிர்க்கிறது?

2006 - 2011 திமுக ஆட்சியில் கருணாநிதி பயன்படுத்திய வார்த்தை என்ன என்பது எல்லோருக்கும் தெரியும். 10 ஆண்டுகள் மத்திய அமைச்சரவையில் இருந்தபோது ‘மத்திய அமைச்சர்கள்’ என்றுதானே சொன்னார்கள்?! இன்றைக்கு அரசியல் ரீதியாக இப்படிச் செல்கிறார்களே தவிர அவர்களிடம் சித்தாந்த நிலைப்பாடு இல்லை. சொல்லப்போனால் சித்தாந்தத் தெளிவும் இல்லை. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசும் வீடியோ ஒன்றில், “காங்கிரஸ் மத்திய ஆட்சியில் இருந்தபோது” என்று சொல்கிறார். அவரே இன்னொருபுறம், “ஒன்றிய பாஜக அரசு” என்று சொல்கிறார். இதையெல்லாம் ஒரு அரசியல் நோக்கத்துக்காகவே பயன்படுத்துகிறார்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in