தவறுகளை மறைக்கவே பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துகிறார்கள்!- காய்ச்சியெடுக்கும் கார்த்தி சிதம்பரம்

தவறுகளை மறைக்கவே பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துகிறார்கள்!- காய்ச்சியெடுக்கும் கார்த்தி சிதம்பரம்

கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.in

நிதானமான பேச்சுக்குப் பெயர்போனவர் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம். ஆனால், அவரது மகனான கார்த்தி சிதம்பரம் தடாலடியாகப் பேசக்கூடியவர். கேள்வியை முடிக்கும் முன்பே பதில் சொல்வது இவரது பாணி. கட்சி விவகாரமாக இருந்தாலும் பொதுப் பிரச்சினைகளாக இருந்தாலும் மனதுக்குத் தோன்றியதை மறைக்காமல் பேசுபவர். ‘காமதேனு' வார இதழுக்காகக் கார்த்தியுடன் அலைபேசியில் உரையாடியதில் இருந்து...

எப்படி இருக்கிறது திமுக அரசின் செயல்பாடு?

கரோனா நிவாரணமாக அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா 4 ஆயிரம் ரூபாய் கொடுப்போம் என்று கொடுத்த வாக்குறுதியை, ஆட்சிப் பொறுப்பேற்ற ஒரு மாதத்திற்குள் நிறைவேற்றியிருப்பது மிகப் பெரிய சாதனை. முந்தைய அதிமுக அரசு தமிழ்நாட்டின் கஜானாவைப் படுபாதாளத்தில் தள்ளியிருக்கிறது. அதை எல்லாம் சரி செய்து, கொடுத்த வாக்குறுதிகளை திமுக படிப்படியாக நிறைவேற்றும் என்று நம்புகிறேன்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in