மெல்லத் திறக்கப்படும் காஷ்மீர் கதவு- டெல்லி சந்திப்பின் முக்கியத்துவம் என்ன?

மெல்லத் திறக்கப்படும் காஷ்மீர் கதவு- டெல்லி சந்திப்பின் முக்கியத்துவம் என்ன?

வெ.சந்திரமோகன்
chandramohan.v@hindutamil.co.in

மாநில அந்தஸ்தை இழந்து முடங்கிக் கிடந்த காஷ்மீர் மீது மீண்டும் நம்பிக்கை வெளிச்சம் படரத் தொடங்கி யிருக்கிறது. பிரதமர் மோடி எடுத்த முன்முயற்சியின் விளைவாக காஷ்மீர், ஜம்முவிலிருந்து அரசியல் கட்சித் தலைவர்கள் டெல்லி சென்று அவருடன் நேரடியாகப் பேசியிருக்கிறார்கள். இதில் பல முக்கிய விஷயங்கள் விவாதிக்கப் பட்டிருக்கின்றன. தீர்வுகளின் திசைவழி நோக்கிய பயணமும் ஆரம்பித்திருக்கிறது.

காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டக்கூறு ரத்து செய்யப்படுவதாக, 2019 ஆகஸ்ட் 5-ல் நாடாளுமன்றத்தில் மத்திய உள் துறை அமைச்சர் அறிவித்த நாளிலிருந்து ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் கதையே மாறிப்போனது. ஜம்மு-காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் காஷ்மீர் பிரிக்கப்பட்டது. தொடர்ந்து காஷ்மீரின் அரசியல் கட்சித் தலைவர்கள் பொதுப் பாதுகாப்பு சட்டத்தின் (Public Safety Act) பெயரால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். அவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டன. ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டது; இணையம் முடக்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளும் அரங்கேறின.

கடந்த சில மாதங்களாக, காஷ்மீரில் மெல்ல மெல்ல நிலைமை மாறிவருகிறது. ஜூன் 24-ல், டெல்லியில் காஷ்மீரின் அனைத்துக் கட்சித் தலைவர்களும் பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசியிருப்பது அந்த மாற்றங்களின் முதல் உச்சமாகப் பார்க்கப்படுகிறது.
அழைப்புவிடுத்த மத்திய அரசு காஷ்மீரிலும், ஜம்முவிலும் விரைவில் தேர்தல் நடத்த ஏதுவாக, அங்கு தொகுதி மறுவரையறை செய்யும் பணிகள் ஜூன் முதல் வாரத்திலிருந்து தொடங்கியிருக்கின்றன. இந்நிலையில், தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகிக்கும் குப்கார் அரசியல் கூட்டணிக்கும், காங்கிரஸ் உள்ளிட்ட பிற அரசியல் கட்சிகளுக்கும் மத்திய அரசின் தரப்பிலிருந்து அழைப்பு விடுக்கப்பட்டது. பேச்சுவார்த்தையின் அடிப்படை நோக்கம் என எதுவும் வெளிப்படையாகச் சொல்லப்படாவிட்டாலும், காஷ்மீரில் தேர்தல் நடத்துவது, ஜனநாயகத்தை நிலைபெறச் செய்வது ஆகியவற்றின் அடிப்படையில் இந்தப் பேச்சுவார்த்தை நடக்கும் என எதிர்பார்ப்பு எழுந்தது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in