சசிகலாவுக்கு எதிரா நாங்க எதுக்கு தீர்மானம் போடணும்?- நழுவும் அதிமுக மாவட்ட செயலாளர்கள்

சசிகலாவுக்கு எதிரா நாங்க எதுக்கு தீர்மானம் போடணும்?- நழுவும் அதிமுக மாவட்ட செயலாளர்கள்

கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.in

“சிறையிலிருந்து சசிகலா விடுதலையானதும், ஒட்டுமொத்த அதிமுகவும் அவர் பின்னால் போய்விடும்" என்ற எதிர்பார்ப்புகளை எல்லாம் பொய்யாக்கி, கட்சியைக் கட்டுப்பாட்டுடன் வைத்திருந்த எடப்பாடி பழனிசாமி, தேர்தலில் கணிசமான இடங்களில் வென்று எதிர்க்கட்சித் தலைவராகவும் தன்னை நிலைநிறுத்திக்கொண்டார். இந்த நிலையில், கட்சித் தொண்டர்களுடன் செல்போனில் உரையாடி, அந்த ஆடியோக்களை வெளியிட்டு வருகிறார் சசிகலா. “கட்சியை மீட்போம், எல்லாத்தையும் சரி செய்வோம், சாதி அரசியலுக்கு முடிவு கட்டுவோம்” என்று பக்தனைத் திடப்படுத்தும் அம்மன் கோயில் பூசாரி போல, பல அருள்வாக்கு ஆடியோ பதிவுகள் வரிசையாக வெளியாகிக் கொண்டே இருக்கின்றன.

சசிகலாவின் செல்போன் உரையாடல்கள் பரபரப்பாகப் பேசப்பட்ட நேரத்தில், கடந்த 14-ம் தேதி அதிமுக எம்எல்ஏ-க் கள் கூட்டத்தைக் கூட்டி சசிகலாவைக் கண்டித்து தீர்மானம் போடவைத்தார் எடப்பாடி பழனிசாமி.

‘உழைப்பைச் சுரண்டும் ஒட்டுண்ணிகள், நற்பெயரை அழிக்கும் நச்சுக் களைகள், அதிமுகவை அபகரித்துவிடலாம் என்று வஞ்சக வலையை நாளும் விரித்துக்கொண்டிருக்கின்றனர். தேர்தலுக்கு முன்பாக அரசியலிலிருந்து ஒதுங்கியிருக்கப் போவதாக அறிவித்த சசிகலா, இப்போது கழகம் இவ்வளவு வலுவும்  பொலிவும் மக்கள் செல்வாக்கும் பெற்றிருப்பதைப் பார்த்ததும் அரசியலில் முக்கியத்துவத்தைத் தேடிக்கொள்ள, கழகத்தை அபகரிக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். ஒவ்வொரு நாளும் தொலைபேசியில் சிலருடன் பேசுவதும் அதை ஊர் அறிய தொலைக்காட்சிகளில் ஒளிபரப்புவதுமாக விநோதமான ஒரு நாடகத்தை அரங்கேற்றி வருகிறார். அதிமுக ஒருபோதும் தன்னை ஒரு குடும்பத்தின் அபிலாஷைகளுக்காக அழித்துக் கொள்ளாது. அதிமுகவின் சட்டதிட்டங்களுக்கு மாறாகவும் இயக்கத்தின் லட்சியத்துக்கு விரோதமாகவும் செயல்படுபவர்கள் யாராக இருந்தாலும் தயவு தாட்சண்யமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஏற்கெனவே தெரிவித்திருந்தோம். அதனையும் மீறி சசிகலாவுடன் பேசிய அனைவரையும் கட்சியைவிட்டு நீக்க வேண்டும்’ என்பதே அந்தத் தீர்மானத்தின் மையக் கருத்து.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in