அயோத்தி ராமருக்காக வாங்கப்பட்ட நிலம்: அதிரவைக்கும் முறைகேட்டுப் புகார்கள்!

அயோத்தி ராமருக்காக வாங்கப்பட்ட நிலம்: அதிரவைக்கும் முறைகேட்டுப் புகார்கள்!

வெ.சந்திரமோகன்
chandramohan.v@hindutamil.co.in

மீண்டும் அரசியல் அரங்கில் கவனம் பெற்றிருக்கிறது ராமர் கோயில் விவகாரம். அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக நிலம் வாங்குவதில் முறைகேடு நடந்திருப்பதாகவும், ராமர் கோயில் அறக்கட்டளையைச் சேர்ந்தவர்களும், உள்ளூர் பாஜக தலைவர்களும் இதற்கு உடந்தையாக இருந்ததாகவும் எழுந்திருக்கும் புகார்கள் அரசியல் பரபரப்புக்கு வழிவகுத்திருக்கின்றன.

புகாரின் பின்னணி

கோயில் கட்டுமானப் பணிகள் தொடர்பாக, ஜூன் 13-ல் அறக்கட்டளை உறுப்பினர்கள் கூடி விவாதித்துக்கொண்டிருந்த சமயத்தில், அயோத்தியில் சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ-வான பவன் பாண்டேயும், லக்னோவில் ஆம் ஆத்மி கட்சி எம்பி-யான சஞ்சய் சிங்கும் தனித்தனியாகச் செய்தியாளர்களைச் சந்தித்து அறக்கட்டளை தொடர்பாகச் சில புகார்களை முன்வைத்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in