வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்டாரா விஜயதரணி?- சர்ச்சையாகும் சிஎல்பி லீடர் நியமன விவகாரம்

வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்டாரா விஜயதரணி?- சர்ச்சையாகும் சிஎல்பி லீடர் நியமன விவகாரம்

என்.சுவாமிநாதன்
swaminathan.n@kamadenu.in

கருணாநிதியும் ஜெயலலிதாவும் இல்லாத முதல் சட்டப்பேரவைத் தேர்தல் தமிழகத்தில் தேசிய கட்சிகளுக்கான வாசலையும் திறந்துவிட்டிருக்கிறது. 20 ஆண்டுகளுக்குப் பின்பு பாஜக சார்பில் நான்கு எம்எல்ஏ-க்கள் சட்டப்பேரவைக்குள் நுழைந்துள்ளனர். கடந்த சில தேர்தல்களில் ஒற்றை இலக்கத்திலேயே இருந்துவந்த காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை இரட்டை இலக்கத்தை எட்டிப் பிடித்திருக்கிறது. அதனாலேயே இந்த முறை சட்டப்பேரவைக் காங்கிரஸ் தலைவர் பதவியும் அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியது.

எதிர்பாராத வெற்றி

சட்டப்பேரவைத் தேர்தல்களைப் பொறுத்தவரை திமுக கூட்டணியில் அதிக எண்ணிக்கையில் இடங்களை வாங்கிக்கொண்டு, குறைவான தொகுதிகளிலேயே வெற்றிபெற்று வந்தது காங்கிரஸ். 2011-ல் அக்கட்சிக்கு 63 தொகுதிகளை ஒதுக்கியது திமுக. ஆனால் அப்போது, வெறும் 5 பேர் மட்டுமே வெற்றிபெற்றனர். அந்தத் தேர்தலில் திமுகவின் தோல்விக்குக் காங்கிரஸ் கட்சிக்கு அதிக இடங்கள் ஒதுக்கியதுதான் காரணம் என விமர்சனம் எழுந்தது. ஆனால், 2016 தேர்தலிலும் காங்கிரஸ் கட்சிக்கு அதிகத் தொகுதிகளை ஒதுக்கியது திமுக. காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட இடங்களில் எல்லாம் எளிதாக வாகைசூடியது அதிமுக. கடந்தகாலத்தின் இத்தகைய படிப்பினைதான் இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 25 இடங்கள்தான் என உறுதியான நிலைப்பாட்டைத் திமுகவை எடுக்கவைத்தது. ஆனால், எதிர்பார்ப்புகளைத் தாண்டி இந்த முறை 18 தொகுதிகளில் வாகைசூடியது காங்கிரஸ் கட்சி.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in