உயிர்பெறுமா கருணாநிதியின் கனவுத் திட்டங்கள்?- உடன்பிறப்புகளின் ஆசையும்... உண்மை நிலவரமும்

உயிர்பெறுமா கருணாநிதியின் கனவுத் திட்டங்கள்?- உடன்பிறப்புகளின் ஆசையும்... உண்மை நிலவரமும்

டி.கார்த்திக்
karthikeyan.di@hindutamil.co.in

தமிழகத்தில் ஆட்சி மாறிவிட்டது. வழக்கமாகக் கருணாநிதி ஆட்சிக்கு வந்தால் ஜெயலலிதாவின் திட்டங்கள் முடக்கப்படும். ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால், கருணாநிதியின் கனவுத் திட்டங்கள் வெளிப்படையாகவே தூக்கி தூர வைக்கப்படும். பத்து ஆண்டுகள் கழித்து இப்போது திமுக முறை. இருவரின் ஆட்சிக்காலத்தில் அரசியல் ரீதியாகப் பரபரப்பைக் கிளப்பிய திட்டங்களில் எவையெல்லாம் தூசுதட்டப்படலாம், மாற்றப்படலாம் அல்லது முடக்கப்படலாம்? பார்ப்போம்.

புதிய தலைமைச் செயலகம்

2006-2011 ஆட்சிக்காலத்தில் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கருணாநிதி ஆசை ஆசையாகப் புதிய தலைமைச் செயலகத்தை உருவாக்கினார். தன் ஆட்சிக் காலம் முடியும் முன்பே அதைத் தொடங்கிவைத்து சட்டப்பேரவைக் கூட்டத்தையும் நடத்தினார். ஆனால், 2011-ல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, சட்டப்பேரவையை மீண்டும் கோட்டைக்கே மாற்றினார். கோடிக்கணக்கான செலவில் உருவான புதிய தலைமைச் செயலகம் என்னவாகும் என அனைவரும் எதிர்பார்த்த வேளையில், அதைப் பன்னோக்கு அரசு மருத்துவமனையாக்கி அதிர வைத்தார் ஜெயலலிதா.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in