எடப்பாடியின் தந்திரம்... திமுகவின் தர்மசங்கடம்!- அரசியலாக்கப்படும் ஆக்ஸிஜன் உற்பத்தி விவகாரம்

எடப்பாடியின் தந்திரம்... திமுகவின் தர்மசங்கடம்!- அரசியலாக்கப்படும் ஆக்ஸிஜன் உற்பத்தி விவகாரம்

டி.கார்த்திக்
karthikeyan.di@hindutamil.co.in

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிப்பதற்கு அனுமதி வழங்குவது தொடர்பாக நடத்தப்பட்ட அனைத்துக் கட்சி கூட்டமும், அந்தக் கூட்டத்தில் திமுக கொடுத்த ஒத்துழைப்பும்தான் சமூக ஊடகங்களில் கடந்த வாரத்தின் ஹாட் டாபிக்.

‘தேர்தல் முடிந்தவுடனே திமுக தன் வேலையைக் காட்டத் தொடங்கிவிட்டதே...’ என்று திமுக அனுதாபிகள் மத்தியில்கூட கொந்தளிப்பைப் பார்க்க முடிந்தது. ஸ்டெர்லைட் அனைத்துக் கட்சி கூட்ட விவகாரத்தில் தானாகப் போய் சிக்கிக்கொண்டதா திமுக?

2018-ல் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்த போராட்டத்தில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட தினத்திலிருந்தே, தென் மாவட்டங்களில் அதிமுக அரசு மீது எழுந்த எதிர்ப்புகளையெல்லாம் திமுக தனக்குச் சாதகமாகவே பயன்படுத்திக்கொண்டது. ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று மக்கள் வழியில் நின்று தொடர்ந்து குரல் கொடுத்து, தன் மீது நம்பகத்தன்மையை அதிகரித்துக்கொண்டது திமுக. ஆனால், கரோனா இரண்டாம் அலை தீவிரமானதும், வட இந்திய மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையும் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கும் நிர்பந்தத்தை வேதாந்தா குழுமம் கச்சிதமாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கும் சூழலில்தான் திமுகவின் நிலைப்பாடு கேள்விக்குரியதாகியிருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in