தேர்தல் ஆணையம்  பாஜகவின் கைப்பாவையாக செயல்படுகிறதா?- சரவெடி கொளுத்தும் ஜோதிமணி

தேர்தல் ஆணையம்  பாஜகவின் கைப்பாவையாக செயல்படுகிறதா?- சரவெடி கொளுத்தும் ஜோதிமணி

கரு.முத்து
muthu.k@kamadenu.in

பெரிய குற்றச்சாட்டுகளோ, வன்முறைச் சம்பவங்களோ நிகழாத வண்ணம் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலைச் செம்மையாக நடத்தி முடித்திருக்கிறது தேர்தல் ஆணையம். எனினும், ஆங்காங்கே புகார்கள் எழாமல் இல்லை.

தேர்தலின்போது பல இடங்களில் இயந்திரங்களில் கோளாறுகள் ஏற்பட்டு அவை சரிசெய்யப்பட்டும், மாற்றப்பட்டும் வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்படி விருதுநகர் சத்ரியபள்ளி வாக்குச்சாவடியில் வைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு இயந்திரத்தில் எந்தச் சின்னத்தில் வாக்களித்தாலும் தாமரை சின்னத்தில் பதிவாவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, தேர்தல் அதிகாரிகள் வாக்குப்பதிவை நிறுத்திவிட்டு இயந்திரத்தை பரிசோதித்து சரிசெய்து வாக்குப் பதிவைத் தொடர்ந்தனர்.

இச்சம்பவத்தைக் குறிப்பிட்டு தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் எம்பி-யான ஜோதிமணி,  ‘விருதுநகர் வாக்குச்சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இது இயற்கையானதாகக்கூட இருக்கலாம். ஆனால், அதெப்படி ஒவ்வொரு முறையும் எல்லா மாநிலங்களிலும் கோளாறான இயந்திரங்களில் எந்தச் சின்னத்தில் வாக்களித்தாலும் தாமரைக்கே பதிவாகிறது... ஏன் ஒருமுறைகூட மற்ற சின்னங்களில் பதிவாவதில்லை?” என்று கேள்வியெழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவரிடம் இன்னும் விரிவாகப் பேசினேன்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in