எலெக்‌ஷன் கார்னர்- ​​​​​​​வாக்களித்த பொன்னார்... வாங்கிக்கட்டிய வசந்த்!

எலெக்‌ஷன் கார்னர்- ​​​​​​​வாக்களித்த பொன்னார்... வாங்கிக்கட்டிய வசந்த்!

வாக்களித்த பொன்னார்... வாங்கிக்கட்டிய வசந்த்!

குமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட விஜய் வசந்த். இந்தத் தேர்தலில் ஓட்டுப்போடவில்லை. தனது வாக்கு சென்னையில் இருப்பதால் ஓட்டுப்போடச் சென்றால் தொகுதி வலம் போக முடியாது என்பதால் வாக்களிப்பதையே தவிர்த்தார். இதைக் கண்டுபிடித்த பாஜக ஐடி விங் தம்பிகள், ‘பொன்னார் ஓட்டுப்போட்டு விட்டார். காங்கிரஸ் வேட்பாளர் ஓட்டாவது போட்டாரா?’ என மீம்ஸ்களை தெறிக்க விட்டு, ‘ஜனநாயகம் தழைக்க பொன்னாருக்கு வாக்களியுங்கள்’ என கடைசி நேரத்திலும் வாட்ஸ் அப்பில் ஓட்டுவேட்டை நடத்தினர்.

தாரகைக்கு லக்... தரணிக்கு செக்!

கடந்தமுறை கிள்ளியூர் தொகுதியில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றவர் காங்கிரஸ் கட்சியின் ராஜேஷ்குமார். இம்முறையும் கிள்ளியூரில் அவரே போட்டியில் இருக்கிறார். இளைஞர் காங்கிரஸ் நிர்வாகியாக இருந்தபோது கட்சிக்காக உழைத்த ராஜேஷ்குமார், குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராகவும் இருந்தார். இந்த நிலையில் தேர்தலில் கையில் வைத்த மை காய்வதற்குள் ராஜேஷ்குமாரை மாவட்ட தலைவர் பதவியிலிருந்து நீக்கிவிட்டது காங்கிரஸ் தலைமை. கிள்ளியூர் தொகுதியில் மீனவர்கள் வாக்கு மட்டுமே சுமார் 50 ஆயிரத்துக்கும் கூடுதலாக உள்ளது. இதைக் கணக்கில் வைத்து இங்கே இம்முறை மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவருக்கு சீட் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை காங்கிரஸுக்குள் பலமாக எழுந்தது. ஆனாலும் ராஜேஷ்குமாருக்கே சீட் கொடுத்தது காங்கிரஸ். ஆனாலும், பாஜகவை வளரவிடக் கூடாது என்ற திட்டத்தில் இம்முறையும் பெருவாரியான மீனவர்கள் கைக்கே கைகொடுத்தார்கள். அதற்கு உடனடி நன்றிக்கடனாக, ராஜேஷ்குமாரை மாவட்ட தலைவர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு மீனவச் சமூகத்து பெண்மணியான தாரகை கட்பர்ட்டை மாவட்டத் தலைவராக நியமித்திருக்கிறது காங்கிரஸ் தலைமை. தமிழக காங்கிரஸ் கட்சியின் முதல் பெண் மாவட்ட தலைவர் என்ற பெருமை ஒருபுறமிருக்க, விஜயதரணி எம்எல்ஏ-வின் முக்கியத்துவத்தைக் குறைக்கவே தாரகையை தலைவர் பதவியில் அமர்த்தி இருப்பதாகச் சொல்கிறார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in