அரசின் அமைப்புகளா... ஆளுங்கட்சியின் அம்புகளா?- எதிர்க்கட்சிகள் மீது மட்டும் பாயும் நடவடிக்கைகள்

அரசின் அமைப்புகளா... ஆளுங்கட்சியின் அம்புகளா?- எதிர்க்கட்சிகள் மீது மட்டும் பாயும் நடவடிக்கைகள்

வெ.சந்திரமோகன்
chandramohan.v@hindutamil.co.in

‘கூண்டுக்கிளி’ - இந்திய அரசியலைக் கவனித்து வருபவர்களால் ஒருபோதும் மறக்க முடியாத வார்த்தை இது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில், நிலக்கரிச் சுரங்கங்கள் ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகார்களை விசாரித்த சிபிஐயின் செயல்பாடு குறித்த விமர்சனமாக உச்ச நீதிமன்றம் இந்த வார்த்தையைக் கூறியது. இதைவைத்து பாஜக தலைவர்கள் காங்கிரஸ் அரசை விளாசித் தள்ளினர். இன்றைக்கு பாஜக ஆட்சியில் சிபிஐ மட்டுமல்ல, தேசியப் புலனாய்வு முகமை (என்ஐஏ), வருமான வரித் துறை, அமலாக்கத் துறை என மத்திய அரசு அமைப்புகள் அனைத்தும் எதிர்க்கட்சிகளை அடக்கி ஒடுக்கும் அரசின் ஏவலாளிகளாகப் பணிபுரிவதாகக் கடும் விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. குறிப்பாக, தேர்தல் காலத்தில் எதிர்க்கட்சிகளைக் குறிவைத்து நடத்தப்படும் சோதனைகள் அந்த விமர்சனங்களுக்கு வலு சேர்க்கின்றன.

அதெல்லாம் ஒரு காலம்

முந்திரா ஊழலை இந்திரா காந்தியின் கணவரும் காங்கிரஸ் எம்பியுமான ஃபெரோஸ் காந்தி பகிரங்கப்படுத்தியபோது, நேரு அதற்குப் பணிந்துபோக வேண்டியிருந்தது வரலாறு. காங்கிரஸுக்கு நிதி வழங்கிவந்த தொழிலதிபர் ஹரிதாஸ் முந்திராவுக்குப் பிரதிபலனாக முந்திரா நிறுவனத்தின் பங்குகளை, சந்தை விலைக்கும் அதிகமான விலைகொடுத்து வாங்கிக்கொள்ள வேண்டும் என்று எல்ஐசி நிறுவனத்துக்கு, அப்போதைய நிதியமைச்சர் டி.டி.கிருஷ்ணமாச்சாரி அழுத்தம் கொடுத்ததாகக் குற்றம்சாட்டியிருந்தார் ஃபெரோஸ் காந்தி. இதையடுத்து கிருஷ்ணமாச்சாரி பதவிவிலக நேர்ந்தது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in