அதிமுகவில் அதிருப்தி... அதுவே ஈஸ்வரனுக்கு திருப்தி!- திருச்செங்கோட்டில் உதிக்குமா உதயசூரியன்?

அதிமுகவில் அதிருப்தி... அதுவே ஈஸ்வரனுக்கு திருப்தி!- திருச்செங்கோட்டில் உதிக்குமா உதயசூரியன்?

கா.சு.வேலாயுதன்
velayuthan.kasu@kamadenu.in

பெருமாள் முருகன் எழுதிய ‘மாதொருபாகன்’ நாவலுக்கு எதிராகக் கொந்தளிப்பான போராட்டங்கள் நடந்த நகரம் திருச்செங்கோடு. சிவனும் சக்தியும் சரிபாதி என்றுணர்த்தும் பிரசித்திபெற்ற அர்த்தநாரீஸ்வரர் கோயிலை மையமாக வைத்து எழுதப்பட்ட அந்நாவல், தன் சமூகத்தைக் கொச்சைப்படுத்துவதாகப் போராடிய கட்சி கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி. அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் இப்போது இங்கு உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். அவருக்கான வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது?

தொகுதி விவரம்

நாமக்கல் மக்களவைக்கு உட்பட்ட சட்டப்பேரவைத் தொகுதி திருச்செங்கோடு. கடந்த 2011-க்கு முன் நடந்த தொகுதி மறுசீரமைப்பில் இதிலிருந்து குமாரபாளையம் தொகுதி உருவானது. இருந்தாலும் வாக்காளர் எண்ணங்களிலும், பிரச்சினைகளின் தன்மையிலும் பழைமை மாறாது நிற்கிறது திருச்செங்கோடு. காந்தி, நேரு போன்ற தேசியத் தலைவர்கள் வந்து சென்ற காந்தி ஆசிரமம் உள்ள புதுப்பாளையம் கிராமம் இத்தொகுதிக்குள்தான் வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in