தெலுங்கில் மாட்லாடும் முருகன்... தாராபுரத்தில் தள்ளாடும் தாமரை!

தெலுங்கில் மாட்லாடும் முருகன்... தாராபுரத்தில் தள்ளாடும் தாமரை!

ரோகிணி
readers@kamadenu.in

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்0, தனது கட்சி வேட்பாளர்களுக்காகச் சூறாவளி சுற்றுப்பயணம் செய்யாமல், தனது தொகுதியான தாராபுரத்தையே சுற்றிவந்துகொண்டிருக்கிறார். இவருக்காகப் பிரதமர் மோடியும் தனிப்பட்ட முறையில் அக்கறையெடுத்து வந்து வாக்கு கேட்டுப் போய்விட்டார். கூட்டணிக் கட்சியான அதிமுகவினரும் உயிரைக் கொடுத்து வேலை செய்கின்றனர். எல்லாம் சரி, வேல் சுமந்த முருகனுக்கு வெற்றி சொந்தமாகுமா?

தொகுதி விவரம்

தாராபுரம் தொகுதியில் இதுவரை நடைபெற்ற 15 தேர்தல்களில் அதிமுக, திமுக ஆகியவை தலா 5 முறையும், காங்கிரஸ் 3 முறையும், பாமக, சுயேச்சை வேட்பாளர்கள் தலா ஒரு முறையும் வென்றுள்ளனர். இந்த முறை திமுக சார்பில் கயல்விழி செல்வராஜ், அமமுகவின் சி.கலாராணி, மக்கள் நீதி மய்யம் சார்பில் சார்லி, நாம் தமிழர் கட்சி ரஞ்சிதா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
கவுண்டர்கள் 25 சதவீதம், அருந்ததியர் சமூகத்தினர் 25 சதவீதம், சிறுபான்மையினர் 18 சதவீதம், மீதம் இதர சமூகத்தினர் வசிக்கும் இத்தொகுதியின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை சுமார் 2 லட்சத்து 38 ஆயிரம். விவசாயம், கால்நடை வளர்ப்பு, கோழிப் பண்ணைகள் தாண்டி, வேலைவாய்ப்புக்கு இளைஞர்கள் திருப்பூர், பல்லடம் பனியன் கம்பெனிகள், விசைத்தறிக் கூடங்களுக்குச் செல்லும் அவலம், இத்தொகுதியின் முக்கியப் பிரச்சினை.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in