வண்டியைத் திருப்பிய சீமான்!- வலுவான போட்டியில் திருவொற்றியூர்

வண்டியைத் திருப்பிய சீமான்!- வலுவான போட்டியில் திருவொற்றியூர்

டி.கார்த்திக்
karthikeyan.di@hindutamil.co.in

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடுவதால், சென்னையில் திருவொற்றியூர் தொகுதிக்கும் இம்முறை  நட்சத்திர அந்தஸ்து கிடைத்திருக்கிறது.

“திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எந்தத் தொகுதியில் போட்டியிடுவாரோ, அங்குதான் நான் போட்டியிடுவேன்” என்று நான்கு மாதங்களுக்கு முன்பே அறிவித்து தேர்தல் களத்தைப் பரபரப்பாக்கினார் சீமான். ஆனால், திடீரென தனது முடிவை மாற்றிக்கொண்டவர், திருவொற்றியூர் பக்கம் வண்டியைத் திருப்பி தம்பிகளை ஆச்சரியமூட்டினார்.

கடந்த முறை கடலூர் தொகுதியில் திமுக, அதிமுக, பாமக, மக்கள் நலக் கூட்டணி என்று நடந்த ஐந்து முனைப் போட்டியில் சிக்கிக்கொண்ட சீமான், வெறும் 12,497 வாக்குகளை மட்டுமே பெற்று டெபாசிட் இழந்து 5-ம் இடத்துக்குத் தள்ளப்பட்டார். எனவே, இம்முறை கவுரமான எண்ணிக்கையில் வாக்குகளை தனக்குத் தரும் தொகுதியை சீமான் தேர்வு செய்வார் என்றே தம்பிகள் எதிர்பார்த்தனர். ஆனால், திருவொற்றியூரை அவர் தேர்ந்தெடுத்தது அவர்களுக்கே ஆச்சரியம்தான்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in