மகேஷுக்கு மகிழ்ச்சியா... குமாருக்கு கொண்டாட்டமா?- திருவெறும்பூர் திக்.. திக்.. நிலவரம்

மகேஷுக்கு மகிழ்ச்சியா... குமாருக்கு கொண்டாட்டமா?- திருவெறும்பூர் திக்.. திக்.. நிலவரம்

கரு.முத்து
muthu.k@kamadenu.in

எந்தத் தேர்தலிலும் அவ்வளவு முக்கியத்துவம் பெறாத திருவெறும்பூர் சட்டப்பேரவைத் தொகுதி, இந்த முறை அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. திமுக, அதிமுக என இரண்டு பிரதானக் கட்சிகளின் மாவட்டச் செயலாளர்களும் இங்கு களமிறங்கியிருப்பதுதான் இதற்குக் காரணம். இங்கு சிட்டிங் எம்எல்ஏ-வாக இருப்பவரும், திமுகவின் தெற்கு மாவட்டச் செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழியே மீண்டும் களம் காண்கிறார். இவரை எதிர்த்து அதிமுக சார்பில் அக்கட்சியின் தெற்கு மாவட்டச் செயலாளர் ப.குமார் போட்டியிடுகிறார்.

சாதி, ஊர், சார்பு

கடந்தமுறை வென்றதும் மகேஷ் சொன்ன முதல் வார்த்தை “இனிமேல் எக்காரணத்தைக் கொண்டும் திருவெறும்பூரில் தேர்தலில் நிற்கக் கூடாது” என்பதுதான். அந்த அளவுக்குக் கட்சிக்காரர்களும், தொகுதியில் பெரும்பான்மையாக உள்ள கள்ளர் சமூகத்தினரும் இவருக்குப் பெரும் குடைச்சல் கொடுத்தார்கள். பொதுவாக எல்லாக் கட்சிகளுமே இங்கு கள்ளர் சமுகத்தாரையே வேட்பாளர்களாக நிறுத்தும். அதிலும் உள்ளூர்க்காரருக்குத்தான் ஓட்டுப் போடுவோம் என்று இங்குள்ளவர்கள் உறுதியாக இருப்பார்கள். அப்படித்தான் 2006-ல், அதிமுக கூட்டணியில் இரட்டை இலை சின்னத்தில் நின்ற மூமுக தலைவர் ஸ்ரீதர் வாண்டையாரைப் புறக்கணித்து உள்ளூர்க்காரரான திமுகவின் சேகரனை இரண்டாவது முறையாகவும் தேர்ந்தேடுத்தார்கள். அப்படிப்பட்ட திருவெறும்பூர் மக்கள், திருச்சி மாவட்டத்தையே சேர்ந்தவரான மகேஷைக் கடந்த தேர்தலில் அவ்வளவு எளிதாக ஏற்றுக்கொள்ளவில்லை. இத்தனைக்கும் இவரும் கள்ளர் சமூகத்தைச் சேர்ந்தவர்தான்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in