சிரிப்பு மூட்டும் சீனிவாசன் தேறுவாரா தேங்குவாரா?- திண்டுக்கல் தொகுதி கள நிலவரம்

சிரிப்பு மூட்டும் சீனிவாசன் தேறுவாரா தேங்குவாரா?- திண்டுக்கல் தொகுதி கள நிலவரம்

கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.in

பெயரைக் கேட்டாலே சும்மா அதிரும் ‘சிரிப்பு அமைச்சர்கள்' பட்டியலில் திண்டுக்கல் சீனிவாசனுக்கும் இடமுண்டு. “மற்ற நேரமெல்லாம் நல்லாத்தான் இருக்காரு. மைக்கப் பார்த்தா தான், இப்படி ஆகிடுறாரு” என்று அதிமுகவினரே ஆச்சரியப்படும் அளவுக்கு அமைச்சரின் பேச்சு பாணி பிரபலம்.

மக்களவைத் தேர்தலின்போது பாமக வேட்பாளருக்கு ஆப்பிள் சின்னத்தில் ஓட்டுக் கேட்டவர், ஒரு சமயம் கோபப்பட்டு, “நாங்க என்ன ஏசுநாதரைச் சுட்ட கோட்சேவின் வாரிசுகளா?” என்று கேட்டுவிட்டார். “புருஷன் வெளியூர்ப் போயிருக்காரா? கவலை வேண்டாம்...” என்றுகூட உளறிவிடும் அவருக்கு, இன்றுவரையில் ஒரு பெரிய சந்தேகம் இருக்கிறது. “நம் பாரதப் பிரதமர் நரசிம்மராவா? மன்மோகன் சிங்கா? நரேந்திர மோடியா?” என்பதே அது. ஆனால், ஒன்று மட்டும் அவருக்கு உறுதியாகத் தெரியும். “நரேந்திரமோடியின் பேரன் ராகுல் காந்தி” என்பது. இதை ஒரு மேடையில்கூட அவர் மாற்றிச் சொன்னதே இல்லை.

சமீபத்தில் ஸ்டாலின் மீது திண்டுக்கல்லார் வைத்த திடுக் குற்றச்சாட்டுக்கு, திமுகவில் ஒருத்தராலும் பதில் சொல்லவே முடியவில்லை. “ஏன்யா, கட்சிக்காரனுக்குப் பூராம் ஒத்த சீட்டைக் கொடுத்துப்புட்டு உதயநிதி ஸ்டாலினுக்கு மட்டும் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணின்னு ரெண்டு தொகுதி கொடுத்திருக்கீங்களே, நியாயமா?”என்பதே அந்தக் கேள்வி. (சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி என்பது ஒரே தொகுதி என்பது கூடவா அமைச்சருக்குத் தெரியாது!)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in