ஆயிரம் விளக்கில் ஆர்ப்பரிக்கும் குஷ்பு!- தாமரை மலருமா... திராவிடம் ஜெயிக்குமா?

ஆயிரம் விளக்கில் ஆர்ப்பரிக்கும் குஷ்பு!- தாமரை மலருமா... திராவிடம் ஜெயிக்குமா?

டி.கார்த்திக்
karthikeyan.di@hindutamil.co.in

இதுவரை, தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் மட்டுமே பார்த்த நடிகை குஷ்புவை வேட்பாளராகப் பார்க்கும் பாக்கியம் தமிழர்களுக்குக் கிடைத்திருக்கிறது. திமுகவின் கோட்டை என வர்ணிக்கப்படும் சென்னையிலேயே, பாஜக சார்பில் களமிறங்கியிருக்கிறார் குஷ்பு. அதுவும், திராவிட பெருந்தலைகள் வென்ற ஆயிரம் விளக்கு தொகுதியில் காவிக் கொடியோடு வளைய வலம் வருகிறார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஹாட்ரிக் வெற்றி அடித்த ஆயிரம் விளக்கில் தாமரையை மலரவைப்பாரா குஷ்பு?

சஞ்சலமும் சந்தோஷமும்

திமுக, காங்கிரஸ் எனக் கடந்த 10 ஆண்டுகளில், பழம்பெரும் அரசியல் கட்சிகளில் பிரச்சார பீரங்கியாகப் பயணித்தவர் குஷ்பு. தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதுதான் அவரது பெருங்கனவு. பாஜகவில் இணையும்போதே தனக்கு ஒரு தொகுதி என்ற உறுதிமொழியுடன்தான் அக்கட்சியிலேயே இணைந்தார். “கருணாநிதிதான் என்னுடைய ஆசான்” என்று இப்போதும் சொல்லும் குஷ்பு, அவர் போட்டியிட்டு ஹாட்ரிக் வெற்றி பெற்ற சேப்பாக்கம் தொகுதியின் மக்கள் பிரதிநிதியாக வேண்டும் என்று ஆசைப்பட்டார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in