பழைய போட்டோவ எடுத்து சுத்துல விட்டுருக்காங்க அண்ணே!- ‘பனங்காட்டுப் படை' ஹரிநாடார் பளபள பேட்டி 

பழைய போட்டோவ எடுத்து சுத்துல விட்டுருக்காங்க அண்ணே!- ‘பனங்காட்டுப் படை' ஹரிநாடார் பளபள பேட்டி 

கே.சோபியா
readers@kamadenu.in

ஜி.பி.முத்துவுக்கு இணையாக தமிழகம் கொண்டாடும் இன்னொரு ‘ஆளுமை' ஹரி நாடார். இவர் ராகுலுடன் இந்தியில் உரையாடிய வீடியோவுடன், ராஜாத்தியம்மாளைச் சந்தித்த புகைப்படமும் சமூக வலைதளத்தில் வைரலானது தனி ஸ்டோரி. இன்னொரு பக்கம் அரசியலைத் தொடர்ந்து, சினிமாவிலும் குதிக்கிறார் ஹரி நாடார் என்கிறார்கள். ஆல் இன் ஆல் மனிதரை ஒரு பேட்டி காணலாமே என்று தொடர்பு கொண்டேன்.

ஏற்கெனவே 4 கிலோ தங்கத்தைச் சுமக்கிறீர்கள். திடீரென என்ன புதிதாக ‘நாடார்' என்று ஒரு தங்கப் பெயர்ப்பலகையைத் தொங்க விட்டிருக்கிறீர்கள்?

அது, நான் புதுசா வாங்குன அரைக்கிலோ தங்கச்சங்கிலி. தமிழ்நாட்ல எல்லாருக்கும் இவர் ஹரிநாடார்னு தெரியும். வெளிநாடு போகும்போது, அங்கேயும் இந்தச் சமூகத்தோட பெருமையைத் தூக்கிப்பிடிக்கத்தான் இந்தச் செயினைப் போட்டிருக்கேன்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in