ஜெயக்குமாருக்கு மீண்டும் ஜெயம் கிடைக்குமா?- ராயபுரம் தொகுதி ரக்கிட்ட... ரக்கிட்ட..!

ஜெயக்குமாருக்கு மீண்டும் ஜெயம் கிடைக்குமா?- ராயபுரம் தொகுதி ரக்கிட்ட... ரக்கிட்ட..!

டி.கார்த்திக்
karthikeyan.di@hindutamil.co.in

“ராயபுரம் தொகுதியில் போட்டியிட மு.க.ஸ்டாலினுக்குத் தைரியம் இருக்கிறதா?” என்று சவால் விடும் அளவுக்கு, வடசென்னையில் ஹெவி வெயிட் அரசியல் தலைவர்தான் அமைச்சர் டி.ஜெயக்குமார். ஜெயலலிதா எதிர்ப்பு அலை பலமாக வீசிய 1996 சட்டப்பேரவைத் தேர்தலைத் தவிர 1991, 2001, 2006, 2011, 2016 என ஐந்து முறையும் வென்று ராயபுரத்தின் ‘ஜெய’க்குமாராக வலம் வருகிறார்.

1957-லிருந்தே பொதுத்தேர்தலைச் சந்தித்துவரும் தொகுதி இது. காங்கிரஸ் 2 முறை, திமுக 7 முறை, அதிமுக 5 முறை இங்கே வெற்றி பெற்றுள்ளன. இந்த ஐந்து முறையும் அதிமுக சார்பில் வெற்றி பெற்றவர் ஜெயக்குமார் என்பது தனிச் சிறப்பு. ஒட்டுமொத்தமாக வெற்றிகளின் அடிப்படையில், ராயபுரம் தொகுதியில் திமுகவுக்கு அதிக செல்வாக்கு இருப்பது போல தெரியலாம். ஆனால் 2001 முதல், தொடர்ச்சியாக இங்கு அதிமுகவே வெற்றிக்கொடியை பறக்கவிட்டு வந்திருக்கிறது. இருந்தாலும் 2019 மக்களவைத் தேர்தலில், வட சென்னைக்கு உட்பட்ட ராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக கூட்டணியைவிட திமுகவுக்கு 3 மடங்கு அதிகமான வாக்குகள் கிடைத்தன. இந்தத் தேர்தலில் மீண்டும் அதிமுக கொடி பறக்குமா? பார்க்கலாம்!

திமுகவின் அஸ்திரம்

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in