துரைமுருகனே புலம்புவதாக கேள்விப்பட்டேன்!- பாமக பாலு பேட்டி

துரைமுருகனே புலம்புவதாக கேள்விப்பட்டேன்!- பாமக பாலு பேட்டி

கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.in

வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு அறிவிப்பால் பாமகவினர் பெருத்த உற்சாகத்தில் இருக்கிறார்கள். கட்சியின் செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் கே.பாலுவைத் தொடர்பு கொண்டபோது, அவரது பேச்சிலும் அதே உற்சாகத்தைக் காண முடிந்தது. வாழ்த்துச் சொல்லிவிட்டு உரையாடினோம். 

வன்னியர்களுக்கு 20 சதவீத தனி ஒதுக்கீடு கேட்டுப் போராடிய பாமக, வெறும் 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு பெற எப்படி ஒப்புக்கொண்டது? 

ஏற்கெனவே, தமிழ்நாட்டில் 69 சதவீத இடஒதுக்கீடே பிரச்சினையில் இருக்கிறது. அதற்குமேல் போனால், ஒட்டுமொத்த இடஒதுக்கீட்டுக்கே பிரச்சினை வரலாம் என்று அரசு தரப்பில் தயங்கினார்கள். சூழல் கருதிதான் மருத்துவர் அய்யா அவர்கள், தனி ஒதுக்கீடு என்ற கோரிக்கையை உள்ஒதுக்கீடு என்று மாற்றிக்கொண்டார்கள். இருப்பினும் வன்னியர்களுக்கு கூடுதல் பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும் என்றால், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ஒதுக்கீட்டில் குறைந்தது 16 சதவீதம் உள்ஒதுக்கீடு வேண்டும் என்பதில் அய்யா உறுதியாக இருந்தார்கள். இடைக்கால ஏற்பாடாகத்தான் 10.5 சதவீதத்துக்கு ஒப்புக்கொண்டிருக்கிறோம். சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி 6 மாதத்திற்குள் வன்னியர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் தர வேண்டும் என்று நாங்களும் வலியுறுத்தி யிருக்கிறோம், முதல்வரும் ஒப்புக் கொண்டிருக்கிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in