முருகனுக்கு நோ... மீனாட்சிக்கு ஓகே!- அழகிரி கோட்டையில் அசராத கனிமொழி

முருகனுக்கு நோ... மீனாட்சிக்கு ஓகே!- அழகிரி கோட்டையில் அசராத கனிமொழி

கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.in

‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' பிரச்சாரப் பயணத்துக்காக அஞ்சா நெஞ்சன் அழகிரியின் மதுரை கோட்டையில் இரண்டு நாட்கள் முகாமிட்டிருந்த கனிமொழி எம்பி., அங்கு மட்டும் 30 இடங்களில் பிரச்சாரம் செய்துவிட்டுத் திரும்பி இருக்கிறார்.

முதல்வரின் சொந்தத் தொகுதியான எடப்பாடியில் கடந்த நவம்பர் 29-ல் தனது சுற்றுப்பயணத்தைத் தொடங்கிய கனிமொழி, பிப்ரவரி 8, 9-ம் தேதிகளில் மதுரைக்கு வந்தார். ஸ்டாலின், உதயநிதியின் கூட்டங்களை ஒருங்கிணைத்த பிரசாந்த் கிஷோரின் ஆட்கள் கனிமொழி நிகழ்ச்சிகளையும் ஒருங்கிணைக்க கருப்பு டி சர்ட், ப்ளூ ஜீன்ஸுடன் வந்திறங்கினார்கள். கனிமொழிக்கு என்பதால், டீம் ஹெட்டாக ஒரு பெண்மணியே வந்திருந்தார்.

முந்தைய நாள் இரவே மதுரை வந்த கனிமொழி, 8-ம் தேதி காலை 8.30 மணிக்கே மதுரை மாநகர் தெற்கு மாவட்ட பகுதிக்கான பிரச்சாரத்துக்கு ஆயத்தமாகிவிட்டார். 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in