ஸ்மார்ட் சிட்டி திட்டம்: சிட்டியை சீர்படுத்தவா... சீரழிக்கவா?

ஸ்மார்ட் சிட்டி திட்டம்: சிட்டியை சீர்படுத்தவா... சீரழிக்கவா?

கே.சோபியா
readers@kamadenu.in

தமிழ்நாட்டில் எந்த மாநகருக்குப் போனாலும், சீனாக்காரன் குண்டு கிண்டு போட்டுட்டானா? என்று கேட்கத் தோன்றும் அளவுக்கு ஊரே உருமாறிக் கிடக்கிறது. காரணம், ஸ்மார்ட் சிட்டி திட்டம். சீர்மிகு நகர் திட்டத்தை, ஊரைச் சீரழிக்கும் திட்டமாக மாறியிருப்பது காலத்தின் கோலம். மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தமிழகத்தின் 12 மாநகராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு, அதில் 10 மாநகராட்சிகளில் பணிகள் நடக்கின்றன. ஒவ்வொரு மாநகராட்சிக்கும் மத்திய - மாநில அரசுகள் தலா ரூ.500 கோடி வழங்குகின்றன. கூடவே, அம்ருட் திட்டத்தின்கீழ் ரூ.600 கோடி. ஆக, மொத்தம் 1,600 கோடி ரூபாய். உள்ளாட்சிகளுக்குப் போதிய அதிகாரங்கள் இல்லை, போதிய நிதி ஒதுக்கீடுகள் இல்லை என்று புலம்பும் மாநகராட்சி நிர்வாகங்கள் இதை எப்படிப் பயன்படுத்தியிருக்க வேண்டும்? ஆனால் நடப்பதோ வேறு.

நெல்லை, தூத்துக்குடி

3 பேருந்து நிலையங்களைக் கொண்ட திருநெல்வேலியில் இப்போது ஒரு பஸ் நிலையமும் கிடையாது. ஜங்ஷன் பெரியார் பேருந்து நிலையத்தை இடித்துவிட்டு, பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தையும் இடித்தார்கள். இரண்டு வேலைகளும் முடியும் முன்பே, வேய்ந்தான்குளத்தில் உள்ள புதிய பேருந்து நிலையத்தையும் மூடிவிட்டு, கடை கட்டுகிறோம் என்று உடைக்க ஆரம்பித்துவிட்டார்கள். இதனால் மொத்த நகரமும் போக்குவரத்து நெரிசலில் விழிபிதுங்கி நிற்கிறது. இதுபோதாது என்று புதிதாக கட்டும் அத்தனை பேருந்து நிலையங்களிலும் கணக்கே இல்லாமல் கடைகளைக் கட்டிக்கொண்டிருக்கிறது மாநகராட்சி.  “பேருந்து நிலையங்கள் பயணிகளுக்காகவா... வணிகர்களுக்காகவா? இத்தனை கடைகள் கட்டினால் போக்குவரத்து நெருக்கடி அதிகரிக்கத்தானே செய்யும்?” என்று கேட்கிறார்கள் மக்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in