தமிழகத்தை முற்றுகையிடும் தேசிய தலைவர்கள்!- புதிய எழுச்சி பெறுமா தேசியக் கட்சிகள்?

தமிழகத்தை முற்றுகையிடும் தேசிய தலைவர்கள்!- புதிய எழுச்சி பெறுமா தேசியக் கட்சிகள்?

கே.சோபியா
readers@kamadenu.in

ராகுல்காந்தி தமிழகத்தை ஒரு கலக்கு கலக்கிச் சென்ற ஓரிரு நாளிலேயே மதுரைக்கு வந்திறங்கினார் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா. அடுத்து பிப்ரவரி 14-ல் மோடி தமிழகம் வருகிறார். அதே தேதியில் ராகுலும் தமிழகம் வருகிறார். இவர்களின் வருகை தேசியக் கட்சிகளிடையே எழுச்சியை ஏற்படுத்துமா?

தேசியக் கட்சிகளின் விருப்பம்

தமிழகத்தில் தேசியக் கட்சிகளின் ஆட்சி முடிவுக்கு வந்தது 1967-ம் ஆண்டு. முடிவு கட்டியவர் அறிஞர் அண்ணா. மாநிலங்களின் உணர்வையும், உரிமையையும் மத்திய ஆட்சியாளர்கள் ஒரு பொருட்டாகவே மதித்த காலம் என்பதால், அண்ணாவால் எழுச்சிபெற்ற தமிழினம் காங்கிரஸ் ஆட்சிக்கு முடிவு கட்டியது. இழந்த ஆட்சியை மீட்டெடுக்க மீண்டும் காங்கிரஸ் செய்த முயற்சிகள் அத்தனையும் படுதோல்வியில் முடிந்தன. திமுக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவதற்காக சில தேசிய கட்சிகள், எம்ஜிஆரை ஆதரித்தன என்றாலும், அது அவர்களுக்கே கேடாய் முடிந்தது. திமுகவுக்கு மாற்று அதிமுக, அதிமுகவுக்கு மாற்று திமுக என்றானது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in